ETV Bharat / state

மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர் குழு தலைவருக்கு செங்கோல் வழங்கத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி! - Meenakshi Amman Temple - MEENAKSHI AMMAN TEMPLE

Meenakshi Amman Temple Case: மீனாட்சி அம்மன் கோயில் பட்டாபிஷேகம் அன்று செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் கணவனை இழந்த, கோயிலின் அறங்காவலர் குழு தலைவருக்குச் செங்கோல் வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Meenakshi Amman Temple Case
Meenakshi Amman Temple Case
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 8:07 PM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் ஒவ்வொரு நிகழ்விலும், ஆகம விதிகள் முறையாகப் பின்பற்றப்படும். விழாவின் 8ஆம் நாளான பட்டாபிஷேகம் அன்று, செங்கோல் மீனாட்சியம்மனின் கைகளில் ஒப்புவிக்கப்படும்.

அந்த செங்கோலை உரிய அறங்காவலர் குழு தலைவர் பெற்றுக் கொள்வார். ஆகம விதியின் படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலைப் பெற்றுக் கொள்ள இயலாது. தற்போது மீனாட்சியம்மன் கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல் ராஜன்.

அவர் கணவரை இழந்தவர் என்பதால் கோவிலின் விதிகளைப் பின்பற்றி அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. வேறு தகுதியான நபரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, "இது போன்ற மனுவை ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து தள்ளுபடி செய்துள்ளது. எனவே, இந்த மனுவும் விசாரணைக்கு உகந்தது அல்ல. ஆகவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

இதனை அடுத்து நீதிபதி சரவணன், "திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? கோயிலினுள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோலை வாங்குபவரும் இந்து தானே?

மேலும், விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டுள்ள கடைசி நேரத்தில் வழக்கைத் தொடர்ந்திருப்பது ஏன்? என வரிசையாகக் கேள்விகளை எழுப்பி, இந்தக் காலத்திலும் இதுபோல கருத்துக்களை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பழனி கிரிவலப் பாதை ஆக்கிரமிப்பு வழக்கு; இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.