ETV Bharat / state

செங்கல்பட்டில் வெறிநாய் கடித்து சிறுவன் உட்பட 7 பேர் படுகாயம்..பொதுமக்கள் அச்சம்! - 7 people injured in rabid dog bite

செங்கல்பட்டு அருகே 2 நாட்களில் வெறிநாய் கடித்ததால் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை
நாய், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 9:00 PM IST

சென்னை: செங்கல்பட்டு அருகே வளர்குன்றம் கிராமத்தில் வெறிநாய் கடித்ததால் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த வளர்குன்றம் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித்திரிந்துள்ளது. இந்நிலையில், பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஜெயக்கொடி என்ற மூதாட்டி தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று மூதாட்டியை கடித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கை எவ்வளவு? - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

தொடர்ந்து அதே கிராமத்தில் தெருவில் நடந்து சென்ற 14 வயது சிறுவன், மூன்று பெண்கள் உட்பட ஏழு பேரை கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெறிநாய் கடித்துக் குதறியுள்ளது. இதனையடுத்து, வெறி நாய் கடிபட்ட அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு தர்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிராமத்தில் அதிகரித்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2 நாட்களில் வெறிநாய் கடித்து 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.