ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 32 ஆயிரம் மதிப்புள்ள சில்வர் டிபன் பாக்ஸ், பிளாஸ்க்குகள் பறிமுதல்! - VIKRAVANDI BYE ELECTION

VIKRAVANDI BYE ELECTION: விக்கிரவாண்டியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட பரிசு பொருட்கள்
விக்கிரவாண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட பரிசு பொருட்கள் (CREDIT -ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 16, 2024, 1:15 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, ஜூன் 10ஆம் தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரகுராமன் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கப்பியாம்புலியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சென்னையிலிருந்து நெய்வேலிக்குச் சென்ற மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்களின்றி 168 சில்வர் டிபன் பாக்ஸ், 48 பிளாஸ்க்குகள் இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 32 ஆயிரம் என கூறப்படுகிறது.

விசாரணையில், காரை இயக்கியவர் நெய்வேலியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பதும், பணி ஓய்வு பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு இப்பொருட்களை கொண்டு செல்வதும் தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை பறிமுதல் செய்து, விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் அலுவலக அதிகாரிகள் பொருட்களை சீலிட்டு விழுப்புரம் துணை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இதுவரை ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இரண்டாவது நாளான நேற்றைய தினம் வேலுார், குடியாத்தத்தைச் சேர்ந்த முனியப்பன் (74) என்பவர் சுயேச்சையாக போட்டியிட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: யார் இந்த சி.அன்புமணி? - எப்போதும் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாமக இம்முறை போட்டியிடுவது ஏன்? - Vikravandi by Election

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.