ETV Bharat / state

குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு - தூத்துக்குடியில் நேர்ந்த சோகம் - குளத்தில் மூழ்கி குழந்தைகள் இறப்பு

3 children died in Thoothukudi: தூத்துக்குடியில் குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 children of same family drowned in a pond in Thoothukudi
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 12:49 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமணன், மீனா தம்பதி. இவர்களுக்கு சந்தியா(13), கிருஷ்ணவேணி(10) என்ற இரண்டு பெண் குழந்தைகளும், இசக்கி ராஜா(7) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் பள்ளி விடுமுறை தினமான நேற்று (மார்ச் 9) மாலை மூன்று குழந்தைகளும் தங்கள் உறவினர்களுடன் பேரூரணியில் அமைந்துள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர்.

அப்போது குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது, உறவினர்களுக்கு தெரியாமல் குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்ற இம்மூன்று குழந்தைகளும் குளத்தில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார், மூன்று குழந்தைகளின் உடல்கள் மீட்டு, பிரதே பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வளர்ப்பு மாட்டைக் குளிப்பாட்டச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி! - திருவாரூரில் நேர்ந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.