வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் ரயில் நிலையம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த இருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இருவரும் முன்னுக்குப் பின் முரனாக பதில் அளித்ததால் அவர்கள் கொண்டு வந்த 3 பைகளை சோதனை செய்தனர்.
அதில் 23 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் கொண்டு வந்த கஞ்சாவை போலீசார் பரிமுதல் செய்ததோடு அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர்கள் இருவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது காலித்(32), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக்(31) என்பதும் தெரிய வந்தது.
மேலும், இவர்கள் ஒடிசாவில் கஞ்சாவை வாங்கிக் கொண்டு ரயில் மூலம் திருப்பூருக்கு கடத்தி சென்றுள்ளனர். அதேபோல் இவர்கள் பயணித்த ரயில் குடியாத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது, ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டதாகவும், இதனைக் கண்ட முகமது காலித் மற்றும் அபிஷேக் அவர்களிடம் இருந்து தப்பிக்க குடியாத்தம் ரயில் நிலையத்தில் இறங்கி வருகையில் நகர போலீசாரிடம் சிக்கி உள்ளனர் என்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன்: மனதிற்கு பிடித்தவர்களுடன் மாலைப்பொழுதைக் கழிக்க வாய்ப்பு - எந்த ராசிக்காரருக்குத் தெரியுமா? - Today Rasipalan In Tamil