தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (வியாழக்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 8ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்காக இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலை சுற்றி குவிய தொடங்கியுள்ளனர்.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டுன் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்கும் மக்களின் கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்கும் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் தலைமையில் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு; தூத்துக்குடி சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் வாகனங்கள் J.J.நகர், ஆதித்தனார் மணிமண்டபம் எதிர்புறம், IMA மஹால் அருகில் (பிரசாத் நகர்), ITI எதிர்புறம் (விடுதி அருகில்), ITI வளாகம், ஆதித்தனார் விடுதி எதிர்புறம் ஆகிய 6 வாகன நிறுத்துமிடங்களிலும், திருநெல்வேலி சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் வாகனங்கள் சுப்பையா லேண்ட் (சபி டிரேடர்ஸ் அருகில்), வியாபாரிகள் சங்கம் (சபி டிரேடர்ஸ் எதிர்புறம்), வேட்டையாடும் மடம் (TNSTC BUS) அன்புநகர் (குமாரபுரம்), குமரன் ஸ்கேன் சென்டர் எதிர்புறம், ஆதித்தனார் குடியிருப்பு (கோவிந்தமாள் கல்லூரி எதிர்புறம்), அருள்முருகன் நகர் (பாண்டி சங்கராச்சாரியார் பள்ளி அருகில்) ஆகிய 7 வாகன நிறுத்துமிடங்களிலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரமன்குறிச்சி சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் வாகனங்கள் பால்பாயாசம் லேண்ட் ( FCI குடோன் கிழக்கு பகுதி), சுந்தர் லேண்ட் (பால்பாயாசம் லேண்ட் எதிர்புறம்), செந்தில்குமரன் பள்ளி (TNSTC BUS) ஆகிய 3 வாகன நிறுத்துமிடங்களிலும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
மேலும் தூத்துக்குடி சாலை வழியாக திருச்செந்தூருக்கும், திருநெல்வேலி சாலை வழியாக திருச்செந்தூருக்கும் வாகன அனுமதிச் சீட்டுடன் (Green Pass) வரும் வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச் வரை வந்து TB சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள.
3 வாகன நிறுத்திமிடங்களிலும் பரமன்குறிச்சி சாலை வழியாக வாகன அனுமதிச் சீட்டுடன் (Green Pass) வரும் வாகனங்கள் திருச்செந்தூர் முருகா மடம் வழியாக அரசு மருத்துவமனை பின்புறம் மார்க்கமாக மெயின் ஆர்ச் வரை வந்து மேற்படி TB சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 வாகன நிறுத்திமிடங்களிலும் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்.
இதையும் படிங்க: கந்த சஷ்டி சூரசம்ஹார விழா: திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம்..!
தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்லாமல், ஆறுமுகநேரி DCW ஜங்ஷன், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி உடன்குடி வழியாக செல்லவும். அல்லது சண்முகபுரம் ரயில்வே கேட், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லவும்.
குரும்பூர் மார்க்கத்திலிருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லவும்.
கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக செல்லவும். அல்லது ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம், நடுநாலுமூலைக்கிணறு விலக்கு வழியாக காந்திபுரம், ராணிமஹாராஜபுரம் வந்து திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லவும்.
நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.