ETV Bharat / state

பழனி முருகனுக்கு நிலக்கொடை அளித்த 18ஆம் நூற்றாண்டு செப்பேடு கண்டுபிடிப்பு! - 18th century SEPPEDU

18th century Seppedu: பழனியில் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், பழனி முருகனுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

18TH CENTURY SEPPEDU
18TH CENTURY SEPPEDU
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 3:20 PM IST

பழனியில் 18 ஆம் நூற்றாண்டு செப்பேடு கண்டுபிடிப்பு

திண்டுக்கல்: பழனியில் 18ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த 'செப்பேடு' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழனி மலைக்கோயில் திருமஞ்சனப் பண்டாரம் சண்முகம் என்பரின் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கணியர் ஞானசேகரன் உதவியோடு ஆய்வு செய்தார்.

இந்த செப்பேடு சிவகங்கைச் சீமையின் அரசர் விஜய ரகுநாத பெரிய உடையாத் தேவர், பழனி முருகனுக்கு அளித்த பூமி தானம் எனும் நிலக்கொடையைப் பற்றிக் கூறுகிறது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது, “பழனியைச் சேர்ந்த காசி பண்டாரத்தின் மகன் பழனிமலைப் பண்டாரத்திற்கு சிவகங்கை அரசர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முசுட்டாக்குறிச்சி, பெத்தானேந்தல், தேசிகனேந்தல், நாயனேந்தல், மருகதவல்லி, சின்னக்குளம் ஆகிய ஆறு ஊர்களை வரிகள் நீக்கி, திருக்காலச் சந்தி காலபூஜையில், திருவிளக்கு, திருமாலை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகியவை தடைபடாமல் நடப்பதற்கு கொடை அளிக்கப்பட்டுள்ளதாக உள்ளது. செப்பேட்டின் முகப்பில் மயில், சூரிய, சந்திரர்களுக்கிடையே வேல், வலது ஓரத்தில் அரசரின் உருவம் ஆகியவை கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

செப்பேடு 875 கிராம் எடையும், 44 சென்டிமீட்டர் உயரமும், 25 சென்டிமீட்டர் அகலமும் உள்ளது. செப்பேட்டின் இருபுறமும் முன்பின் பக்கங்களில் 100 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இச்செப்பேட்டின் முன் பக்கம் முழுவதும், விசையரகுநாத பெரிய உடையாத்தேவரின் 123 பட்டங்கள் புகழ்ச்சியுடன் பொறிக்கப்பட்டுள்ளன. பின் பக்கம், 65ஆம் வரிக்கு இடையில் தெலுங்கு மொழியில் 'ஆறுமுக ஸகாயம்' என்று எழுதப்பட்டுள்ளது.

செப்பேட்டின் இறுதியில் இந்த தர்மத்தை பரிபாலனம் பண்ணிய பேர்கள் அடையும் புண்ணியத்தையும், கெடுதல் செய்தவர்கள் அடையும் தோஷத்தையும் பற்றிய விரிவான செய்திகள் உள்ளன. இச்செப்பேட்டை தர்மராய பிள்ளையின் மகன் சொக்கு என்பவர் எழுதி உள்ளார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மூதாட்டியை கடித்து குதறிய முதலை.. அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி - A Crocodile Bit An Old Woman In TN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.