ETV Bharat / state

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் வீடு திரும்பினர்..! - RAMESWARAM FISHERMEN

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையம் வந்த மீனவர்கள்
சென்னை விமான நிலையம் வந்த மீனவர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2024, 12:44 PM IST

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை விசைப்படகில் சென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் அங்கு வந்து தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி, மீனவர்களை கைது செய்து, படகு மற்றும் மீன்பிடி வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மீனவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து மாநில, மத்திய அரசுகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதி மீனவர்களையும், அவர்கள் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்கள் எண்ணிக்கை.... மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்!

இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். இந்நிலையில் இலங்கை நீதிமன்றம் கடந்த 20 தேதி தமிழக மீனவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்கள் 12 பேரையும் தங்கள் பராமரிப்பில் சில நாட்கள் வைத்திருந்து அவர்களை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதன்படி மீனவர்கள் 12 பேருக்கும், தூதரக அதிகாரிகள் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடுகள் செய்தனர்.

அதன்பின்பு நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை வரும் பயணிகள் விமானத்தில் 12 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.