ETV Bharat / state

கோவையில் நிகழ்ந்த தலித் இளைஞர் படுகொலை சம்பவம்.. 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை! - kovai dalith youth murder - KOVAI DALITH YOUTH MURDER

kovai dalit youth murder case verdict கோவையில் 2016 ஆம் ஆண்டு பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கோவை எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தண்டனை பெற்ற குற்றவாளிகள்
தண்டனை பெற்ற குற்றவாளிகள் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 7:22 PM IST

கோயம்புத்தூர்: கோவை ரத்தினபுரி பகுதியில் 2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடுவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் பட்டியல் இனத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவரை அந்த பகுதி இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக பிரசாந்தின் சகோதரர் தாமரை கண்ணன் சகோதரனை தாக்கிய இளைஞர்களை தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தாமரைக் கண்ணன் தங்கியிருந்த அறைக்கு சென்று கிரிக்கெட் பேட்டால் அவரை அடித்து கொலை செய்தனர். இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விக்கி என்பவர் உட்பட 14 பேர் மீது ரத்தினபுரி போலீசார் கொலை மற்றும் எஸ்.சி , எஸ்.டி வழக்கு உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து 14 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து, கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் இன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், 14 பேரில் ஜெயசிங் என்பவர் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே உயிரிழந்த நிலையில், விஜய் என்பவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள 12 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் , இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றவாளிகளான விக்கி, மகேந்திரன், கார்த்திக், கவாஸ்கான், சுரேஷ், பிரகாஷ், நவீன், விமல், கௌதம், கலைவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கிறிஸ்டோபர் மற்றும் கருப்பு கௌதம் ஆகிய இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு வழக்கினார்.

கோவையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணையும் விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கல்யாண ராணி சத்யா புதுச்சேரியில் கைது.. 12 ஆண்களை ஏமாற்றி பணம் பறித்தது அம்பலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.