ETV Bharat / sports

உலக சாதனை படைத்த ஜெய்ஸ்வால்! இப்படியாவது நியூசிலாந்துக்கு பதிலடி கொடுப்போம்! - IND VS AUS 1ST TEST CRICKET

ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் விளாசி இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உலக சாதனை படைத்தார்.

Yashasvi Jaiswal
Yashasvi Jaiswal (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 23, 2024, 5:07 PM IST

ஐதராபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று (நவ.23) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று (நவ.23) 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் நிலைத்து நின்று விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

இருவரும் அரை சதம் கடந்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 57 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல். ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புது உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். 22 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்றைய நாளில் 2 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் அவரது டெஸ்ட் சிக்சர்கள் 34 ஆக உயர்ந்தது. நடப்பாண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஜெய்ஸ்வால் 34 சிக்சர்கள் விளாசி உள்ளார்.

இதற்கு முன் நியூசிலாந்து அதிரடி வீரர் பிரண்டன் மெக்கலம் ஒரு ஆண்டில் 33 சிக்சர்களை விளாசி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்து புது வரலாறு படைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் அவர் இரண்டு முறை இரட்டை சதங்கள் விளாசி உள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக விசாகபட்டினத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக இரண்டு இரட்டை சதங்களை விளாசி இருந்தார்.

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்து ஒரு காலண்டர் ஆண்டில் வேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இளம் வீரர் என்ற சிறப்பையும் ஜெய்ஸ்வால் படைத்து இருந்தார். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (90 ரன்), கே.எல். ராகுல் (62 ரன்) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் புது வரலாறு: ஹாட்ரிக் சதம் விளாசிய திலக் வர்மா !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.