ETV Bharat / sports

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் ஓய்வா? வீடியோவில் மவுனம் காக்க என்ன காரணம்? - shikhar dhawan ipl

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 24, 2024, 12:59 PM IST

சர்வதேசம் கிரிக்கெட்டில் இருந்து ஷிகர் தவான் ஓய்வு அறிவித்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Etv Bharat
Shikhar Dhawan (IANS Photo)

ஐதராபாத்: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவான் தொடர்ந்து விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவான், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கன் சார்ஜர்ஸ், சன்ரைசஸ் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடி உள்ளார். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். ஓய்வு முடிவு குறித்து வெளியிட்ட வீடியோவில் கூட ஐபிஎல் தொடரில் பங்கேற்பது தொடர்பாக ஷிகர் தவான் மவுனம் காத்தது ரசிகர்களிடையே மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தவானின் ஐபிஎல் பயணம்:

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை 222 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஷிகர் தவான், 6 ஆயிரத்து 768 ரன்கள் குவித்து உள்ளார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடைசியாக கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான் களமிறங்கினார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஷிகர் தவான். தோள்பட்டை காயம் காரணமாக வெறும் 5 ஆட்டங்களில் மட்டும் விளையாடி விட்டு ஓய்வு பெற்றார். ஷிகர் தவான் இல்லாத காரணத்தால் கூட ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி 14 ஆட்டங்களில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் 10வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஓய்வா?:

ஷிகர் தவான் தனது ஓய்வு குறித்து அறிவித்த வீடியோவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது தொடர்பாக எந்த அறிவிப்பும், வெளியிடவில்லை. அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஷிகர் தவானை தக்கவைப்பது தொடர்பாக மூச்சு காட்டாமல் இருந்து வருகிறது. நடப்பு சீசனில் படுதோல்வியை சந்தித்த காரணத்தால் ஷிகர் தவானுக்கு கழற்றிவிட்டு அவருக்கு பதிலாக வேறு வீரரை தக்கவைக்கும் திட்டத்தில் பஞ்சாப் அணி நிர்வாகம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

முன்னாள் வீரர்களின் ஓய்வில் இருந்த மாற்றம்:

அண்மையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டிலும் இனி விளையாடப் போவதில்லை என்று கூறினார். அதேநேரம் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் SAT20 தொடரில் விளையாட அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக 2022ஆம் ஆண்டு ராபின் உத்தப்பா அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் அபுதாபி டி20 கிரிக்கெட் தொடரில் பெங்கால் டைகர்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். அதேநேரம் 2022ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா ஐபிஎல் உள்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை - குஜரத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் தனது ஐபிஎல்லில் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று அம்பதி ராயுடு தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் சர்வதேச லீக் டி20 கிரிக்கெட் தொடரில் எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாடினார். அதன்படி ஷிகர் தவான் தனது ஓய்வில் இது குறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில், அவர் ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திடீரென ஓய்வை அறிவித்த இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி! - Shikhar Dhawan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.