அடிலைட் (ஆஸ்திரேலியா) : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த மாத இறுதியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலைடில் இன்று துவங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதவில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்ததையடுத்து, 44.1 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
Don't miss the documentary 'The Boy from Macksville' airing tonight after day one of the Test: https://t.co/hR7IqzadXT
— cricket.com.au (@cricketcomau) December 6, 2024
முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு தக்க பதிலடி தந்தே ஆக வேண்டும் என்ற வேகத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று அடிலைடில் களமாடியது காண முடிந்தது. அத்துடன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் களத்தில் இருந்தபோது, தங்களது ஜெர்சியுடன், இடதுகையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்ததும் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
மறைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்களான ஃபிலிப் ஹியூ, இயன் ரெட்பாத் ஆகியோரின் நினைவை போற்றும் விதத்தில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் போட்டியில் எதிரணி வீரர் வீசிய பவுன்சர் பந்து தலையில் பலமாக பட்டதன் விளைவாக ஹியூ உயிரிழந்தார். அவர் மறைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவரது 10 ஆம் ஆண்டு நினைவை, அடிலைட் டெஸ்ட் போட்டியின்போது அனுசரிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அண்மையில் முடிவு செய்திருந்தது.
What could have been ... 😢
— cricket.com.au (@cricketcomau) December 6, 2024
Incredible read from @AdamBurnett09 about the path Phillip Hughes took, and the one he was supposed to walk next: https://t.co/eKtcQVmfPJ pic.twitter.com/oF85IEP3Bi
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்! அன்கேப்டு வீரரை அழைக்கும் ஆஸ்திரேலியா! புது திட்டமா?
அதன்படி, இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் 13வது வீரராக ஃபிலிப் ஹீயூவின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. போட்டி துவங்குவதற்கு முன், மைதானத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒட்டுமொத்த எழுந்து நின்று 63 நிமிடங்கள் கைதட்டி, ஹியூவுக்கு மானசீகமாக மரியாதை செலுத்தினர். முன்னதாக அவரது வாழ்க்கை வரலாற்றை தொகுத்து ஆவணப்படம் திரையிடப்பட்டது.
கடந்த 2009 பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, தமது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடிய ஹீயூ, ஆஸ்திரேலியாவுக்காக மொத்தம் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலும் இந்த இடதுகை பேட்ஸ்மேன் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
மற்றொரு முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான இயன் ரெட்பாத், டிசம்பர் 1 ஆம் தேதி, தமது 83 அகவையில் வயோதிகம் காரணமாக காலமானார். கடந்த 1964 முதல் 1976 ஆம் ஆண்டு வரை, இவர் ஆஸ்திரேஸியாவுக்காக மொத்தம் 66 டெஸ்ட் மேட்ச்களிலும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
பிங்க் நிற பந்தை கொண்டு ஆடப்படும் இன்றைய போட்டியில், இந்திய நேரம் மாலை 4:15 நிலவரப்படி, ஆஸ்திரேலிய அணி தமது முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்களை எடுத்துள்ளது.