சண்டிகர்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்து இருந்த வினேஷ் போகத் (Vinesh Phogat), நிர்ணயிக்கப்பட்டத்தைவிட 100 கிராம் கூடுதல் எடையுடன் இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பாட்டர்.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை மல்யுத்த போட்டிகளிலிருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், "இனி போராட சக்தியில்லை" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
हरियाणा की हमारी बहादुर बेटी विनेश फौगाट ने ज़बरदस्त प्रदर्शन करके ओलंपिक में फाइनल में प्रवेश किया था। किन्हीं भी कारणों से वो भले ही ओलंपिक का फाइनल नहीं खेल पाई हो लेकिन हम सबके लिए वो एक चैंपियन है।
— Nayab Saini (@NayabSainiBJP) August 8, 2024
हमारी सरकार ने ये फैसला किया है कि विनेश फौगाट का स्वागत और अभिनंदन एक…
வினேஷ் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், கடைசிவரை போராடிய அவருக்கு பலரும் ஆறுதல்களையும், தங்களது வாழ்த்துகளையும் கூறு வருகின்றனர். இந்தநிலையில் வினேஷ் போகத்தை, வெள்ளி பதக்கம் வென்ற வீரரைப் போல் நடத்துவோம் என ஹரியான அரசு அறிவித்துள்ளது.
பாராட்டு விழா: இது குறித்து அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "எங்கள் துணிச்சலான மகள், ஹரியானாவைச் சேர்ந்த வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் அபாரமாக விளையாடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். ஆனால் சில காரணங்களால், அவரால் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனது.
இருப்பினும் அவர் நம் அனைவருக்கும் அவர் ஒரு சாம்பியன். எனவே வினேஷ் போகத்-க்கு வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கான வரவேற்பை ஹரியானா அரசு வழங்கும். மேலும் அவருக்கான வெகுமதிகளை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
ஹரியானா அரசு தனது விளையாட்டுக் கொள்கையின்படி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களுக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2.5 கோடியும் வழங்குகிறது. இதனால் வினேஷ்க்கு 4 கோடி வெகுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
पेरिस ओलंपिक में दो ब्रॉन्ज मेडल जीतकर स्वदेश लौटी हरियाणा की बेटी @realmanubhaker से फोन पर बात की और उन्हें मुख्यमंत्री निवास आने का न्योता दिया।
— Nayab Saini (@NayabSainiBJP) August 8, 2024
मनु भाकर आपने पूरे देश को गौरवान्वित किया है और तिरंगे का मान बढ़ाया है।आज आप हरियाणा की बेटियों के शौर्य और सम्मान का…
மனு பாக்கர்: இதே போல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கல பதக்கங்களை வென்று நாடு திரும்பிய மனு பாக்கர் இடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு,பேசியதாக முதலமைச்சர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் இல்லத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பளுதூக்கும் போட்டியில் பறிபோன பதக்கம்.. கண்ணீருடன் வெளியேறினார் மீராபாய் சானு!