ETV Bharat / sports

ஹரியானா சட்டப் பேரவை தேர்தலில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா போட்டி! ராகுலுடன் சந்திப்பு! - Vinesh Phogat joins congress - VINESH PHOGAT JOINS CONGRESS

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்,.

Etv Bharat
Bajrang punia - Rahul Gandhi - Vinesh Phogat (X/@INCIndia)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 4, 2024, 12:54 PM IST

டெல்லி: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் வீரர் பஜ்ரங் புனியா புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஹரியானா சட்டமன்ற தேர்தலில் இருவரும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வினேஷ் போகத்தின் சகோதரி பபிதா போகத் ஏற்கனவே பாஜகவில் உறுப்பினராக உள்ள நிலையில், அவரும் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதனிடையே வினேஷ் போகத்தின் பெரியப்பா எம்எஸ் போகத் ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் ஹரியானா சட்டமன்ற தேதலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இன்று காலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர். காஷ்மீர் பயணத்திற்கு முன்னதாக ராகுல் காந்தி, வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை சந்தித்தார். ஹரியானா சட்டப் பேரவை தேர்தல் தொடர்பான காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு ஈடுபட்டு உள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஹரியானா சட்டப் பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பதற்கான காங்கிரஸ் மத்திய குழு கூடி ஆலோசனை நடத்தியது. ஹரியானா சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 34 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஹரியானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பபாரியா தெரிவித்தார்.

மேலும், ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என தீபக் பபாரியா குறிப்பிட்டு இருந்தார். அப்போது, பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்ட உள்ளனரா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அது குறித்து புதன்கிழமை விளக்கம் அளிக்கப்படும் என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா நேரில் சந்தித்ததை அடுத்து பல்வேறு கேள்விகளுக்கு கிடைத்து உள்ளது. முன்னதாக நான்கு நாட்களுக்கு முன் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் வினேஷ் போகத் கலந்து கொண்டார்.

வரும் அக்டோபர் 5ஆம் தேதி ஒரே கட்டமாக ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. முன்னதாக அக்டோபர் 1ஆம் தேதி தேர்தலும், 4ஆம் தேதி இமாச்சல பிரதேசம் மற்றும் ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கையும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்தது. பின்னர் தேர்தல் தேதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் தேர்வு குழு உறுப்பினராக அஜெய் ராத்ரா நியமனம்! யார் இவர்? - Ajay Ratra

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.