பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு துப்பாக்கிச் சுடுதலில், 10 மீட்டர் ஏர் பிஸ்டலின் கலப்பு பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் துப்பாக்கிச் சுடுதல் வீரருக்கே உரித்தான கவச உடை, அதிக சத்தத்தை உணராமல் இருக்க இயர் பட்ஸ், வெளிச்சத்தால் கண் கூச்சம் ஏற்படாமல் இருக்க கண் மறைவு திரை, கூலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை அணிவித்து இருந்தனர்.
Currently the most famous man in the world
— Enez Özen (@Enezator) July 31, 2024
pic.twitter.com/srxPhwDkUk
ஆனால் இது போன்ற எந்த வித உபகரணங்களும் இல்லாமல் வெறும் டீ சர்ட், பேண்ட், காதுகளில் இயர் பட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு வந்து அனைவரும் வியக்கும் அளவுக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றுச் சென்ற துருக்கி வீரர் தான் தற்போது சமூக வலைதளங்களின் ஹாட்ஸ்பாட்டாக உள்ளார்.
தலைவர் வேற ரகம் பார்த்து உஷாரு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல் துருக்கி வீரர் யூசுப் டிகேக்கிம் செயல் அமைந்து உள்ளது. துருக்கி நாட்டின் கொடி மற்றும் எழுத்துகள் பொறித்து இருந்த ஜெர்சி அணிந்து கொண்டு, ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்து அசால்டாக இலக்கை பட்டு பட்டென சுட்டு வீழ்த்தும் அவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வெற்றிக்கு பின்னரும் எந்தவித ஆரவாரமும் இன்றி இருக்கும் யூசுப் டிகேக்கின் மேனரிசத்தை பார்த்து நெட்டிசன்கள் கலவையான கமென்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் யூசுப் டிகேக் மற்றும் அவரது இணை செவ்வல் இலைதா தர்ஹான் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
Did Turkey send a hitman to the Olympics?
— Manish (@speakwithmanish) August 1, 2024
Turkish shooter Yusuf Dikec remarkable achievement of winning a silver medal at the Olympics with limited gear has not only impressed spectators but also highlighted his exceptional talent and determination. #Turkey #Olympics #YusufDikec pic.twitter.com/CGbvUwPIZZ
இதில் ஆச்சரியத்தக்க வகையிலான கூடுதல் தகவல் என்னவென்றால் அவருக்கு வயது 51. இது வரை ஐந்து முறை ஒலிம்பிக் போட்டியில் அவர் கலந்து கொண்டு உள்ளார். 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தற்போது அவர் அனைத்து ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அதேநேரம், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தான் அவர் முதல் முறையாக பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சச்சின் தெண்டுல்கரை உருவாக்கிய அன்ஷுமன் கெய்க்வாட் மறைவு! பிரதமர் வரை இரங்கல் தெரிவிக்க என்ன காரணம்? - Anshuman Gaekwad