திருநெல்வேலி: 8வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சேலத்தில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 11லீக் போட்டிகள் அங்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2ம் கட்ட லீக் போட்டிகள் கோயம்புத்தூரில் தொடங்கியது.
அங்கு 8 லீக் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்தநிலையில் 3ம் கட்ட லீக் போட்டிகள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 18வது லீக் போட்டியில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் - ஆண்டனி தாஸ் தலைமையிலான திருச்சி கிராண்ட் சோலஸ் அணிகள் எதிர் கொண்டது.
A spectacular victory for TGC over NRK tonight! 🔥
— TNPL (@TNPremierLeague) July 20, 2024
📺 Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#TGCvNRK #NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/zKTB9MNUje
178 இலக்கு: திருநெல்வேலி உள்ள இந்திய சிமெண்ட்ஸ் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு தொடங்கிய, இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது.
இதில் கேப்டன் அருண் கார்த்திக் 51 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 84 ரன்கள் விளாசினார். இவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் ரித்திக் ஈஸ்வரன் 23 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். மற்ற 7 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.
திருச்சி அணி தரப்பில் சரவண குமார் 4 விக்கெட்டுகளையும், அதிசயராஜ் டேவிட்சன் மற்றும் ஆண்டனி தாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
திருச்சி வெற்றி: இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கிக் களமிறங்கிய திருச்சி அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய வசீம் அகமது 27 ரன்களும், ராஜ்குமார் 22 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.
அர்ஜூன் மூர்த்தி 1 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து களமிறங்கிய ஜாபர் ஜமால் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்கள் குவித்தனர். பின்னர் இருவரும் ரன் அவுட் ஆகி வெளியேறினர்.
Captain's knock from Arun Karthick KB. 🔥
— TNPL (@TNPremierLeague) July 20, 2024
📺 Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#TGCvNRK #NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/pJXOl6eAYv
இறுதியில் களமிறங்கிய ராஜ்குமார் 13 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்கள் விளாசினர். இதனால் 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்த திருச்சி கிராண்ட் சோழாஸ், 4 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இன்றைய போட்டி: இன்று இரவு 7.30 நடைபெறும் 19வது லீக் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி - ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியை எதிர் கொள்கிறது.
இதையும் படிங்க: முதல்முறை ஒலிம்பிக்கிலேயே இந்திய அணிக்கு தலைமை தாங்கும் பிரித்திவிராஜ் தொண்டைமான்.. பதக்க அறுவடை தொடருமா?