சேலம்: டிஎன்பிஎல் 8வது சீசன் சேலத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 7வது லீக் போட்டியில் ஆண்டனி தாஸ் தலைமையிலான திருச்சி கிராண்ட் சோழாஸ், ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர் கொண்டது.
சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய திருச்சி அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக, அர்ஜுன் மூர்த்தி மற்றும் வசீன் அகமது ஆகியோர் களமிறங்கினர்.
The drought is over! Trichy Grand Cholas secure a long-awaited victory! ⚔
— TNPL (@TNPremierLeague) July 9, 2024
📺 Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#SMPvTGC #NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/wvS2yKwXKF
இதில் அர்ஜுன் மூர்த்தி 5 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேற, அடுத்து வந்த ஷியாம் சுந்தர் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சய் யாதவ் - வசீன் அகமதுடன் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
வசீம் அகமது, சஞ்சய் யாதவ் அதிரடி: இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் வசீன் அகமது 55 பந்துகளில் 90 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் இணைந்து ஆடிய சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களை குவித்தது திருச்சி கிராண்ட் சோழாஸ். நடப்பு டிஎன்பில் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Shriram capital player of the match to Wasim for his powerful 90 off 55 balls. @TNCACricket @GrandCholasTNPL #TNPL2024#NammaOoruAattam#NammaOoruNammaGethu pic.twitter.com/s9CiRUNqqG
— TNPL (@TNPremierLeague) July 10, 2024
மளமளவென சரிந்த விக்கெட்டுகள்: இதனைத் தொடர்ந்து 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மதுரை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக சுரேஷ் லோகேஷ்வர் மற்றும் கேப்டன் ஹரி நிஷாந்த் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் லோகேஷ்வர் ஐந்து பந்துகளில், ஏழு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து திருச்சியின் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது மதுரை. அந்த அணியில் கேப்டன் ஹரி நிஷாந்த் 39 ரன், ஸ்வப்னில் சிங் 18 ரன், சசிதேவ் 17 ரன் மற்றும் அக்ரம் கான் 11 ரன் ஆகியோரை தவிர மற்ற யாரும் ஒன்றை இலக்க ரன்னை தாண்டவில்லை.
இதனால் 16.4 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது திருச்சி கிராண்ட் சோழாஸ். அந்த அணியில் சஞ்சய் யாதவ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அதிசயராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
ஆட்டநாயகன்: 55 பந்துகளில் 7 பவுண்டரி 5 சிக்ஸர்கள் என 90 ரன்கள் விளாசியதுடன் கடைசிவரை களத்தில் நின்ற திருச்சி அணியின் வசிம் அகமது ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: இந்தியாவின் அசத்தல் பந்துவீச்சு.. அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசல்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!