சேலம்: டிஎன்பிஎல் 8வது சீசன் கிரிக்கெட் தொடர் சேலத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றது. இதன் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் விஜய் சங்கர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ், ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸை எதிர் கொண்டது. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற, இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக சுஜய் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் களமிறங்கினர். இதில் சுரேஷ்குமார் 6 ரன்னிலும், சுஜய் 27 ரன்னிலும் விக்கெட் இழந்து வெளியேறினர்.
Tushar Raheja put on a tough fight with the bat before falling prey in the final over. 🏏
— TNPL (@TNPremierLeague) July 7, 2024
📺 Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#LKKvIDTT #NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/eh4NGAvnuQ
இதனையடுத்து களமிறங்கிய சச்சின் 30 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய முகிலேஷ் 13 ரன்களுக்கும் வெளியேறினார். மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய கேப்டன் ஷாருக்கான் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 55 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் நடராஜன் வீசிய பந்தில் விக்கெட் இழந்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய யாரும் பெரியதாக சோபிக்கவில்லை.
161 இலக்கு: இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பாக நடராஜன் மற்றும் அஜித் ராம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனை தொடர்ந்து 161 ரன்கள் அடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ராதாகிருஷ்ணன் - துஷார் ரஹேஜா ஆகியோர் களமிறங்கினர்.
இதில் ராதாகிருஷ்ணன் போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் இழந்து வெளியேற அடுத்து வந்த அமித் சாத்விக் 12 ரன்களுக்கு அவுட்டானர். இதனையடுத்து கேப்டன் விஜய் சங்கர் மற்றும் துஷார் ரஹேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர்.
Thrilling win for LKK! Lyca Kovai Kings held their nerves well in the dying minutes of the game to register their second victory of the season.
— TNPL (@TNPremierLeague) July 7, 2024
📺 Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#LKKvIDTT #NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/dphQquSrDp
இதில் விஜய் சங்கர் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய முகமது அலி 35 ரன்களுக்கும், பின்னர் வந்த அனிருத் 4 ரன்களுக்கும், அஜித் ராம் 4 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
வெற்றி அருகில் சென்று தோல்வி: கடைசி 2 ஓவர்களில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் 19ஆவது ஓவரை வீசிய கேப்டன் ஷாருக் கான் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதனால் 6 பந்துகளில் 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், போட்டியின் கடைசி ஓவரை முகமது வீசினார்.
அந்த ஓவரில் அபாரமாக ஆடி வந்த துஷார் ரஹேஜா 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டம் பரபரப்பானது. இறுதியில் 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரின் 5வது பந்தை பந்தை அஜித் ராம் பவுண்டரி விளாசினார். ஆட்டத்தின் கடைசி பந்தில் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய கணேஷ் ரன் அவுட் ஆக லைகா கோவை கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: சென்னையில் மழை.. இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் 2வது டி20 தொடர் ரத்து!