ETV Bharat / sports

2 உலக சாதனை படைத்த இந்திய அணி! ஆனாலும் பாகிஸ்தானை முந்த முடியல! - INDIAN TEAM WORLD RECORD

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியின் மூலம் இந்திய அணி புது உலக சாதனை படைத்துள்ளது.

Etv Bharat
Team India (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 14, 2024, 1:05 PM IST

ஐதராபாத்: இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று (நவ.13) நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் திலக் வர்மா (107 ரன்) அபாரமாக விளையாடி சதம் விளாசினார். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அரை சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர்கள்:

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் மொத்தம் 13 சிக்சர்கள் விளாசினர். அதிகபட்சமாக திலக் வர்மா 7 சிக்சரும், அபிஷேக் சர்மா 5 சிக்சர்களும் விளாசினர். இதன் மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர்கள் விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த சாதனையை படைத்து இருந்தது.

இந்த ஆண்டில் மொத்தம் 21 போட்டிகளில் விளையாடி உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அதில் 201 சிக்சர்கள் விளாசியிருந்தன. தற்போது இந்திய அணி 25 டி20 போட்டிகளில் விளையாடி 214 சிக்சர்கள் விளாசி புது மைல்கல் படைத்துள்ளது.

வெளிநாட்டு மண்ணில் 100வது வெற்றி:

இந்த சாதனை தவிர்த்து மற்றொரு சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது. வெளிநாட்டு மண்ணில் 100வது வெற்றியை பதிவு செய்து இந்தியா புது வரலாறு படைத்துள்ளது. இது வரை வெளிநாட்டு மண்ணில் 152 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி அதில் 100 போட்டிகளை வென்று உள்ளது.

இந்த சாதனையில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 203 போட்டிகளில் விளையாடி 116 வெற்றிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் 138 போட்டிகளில் 84 வெற்றிகளுடன் 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா 137 போட்டிகளில் 71 வெற்றிகளுடனும், இங்கிலாந்து 129 ஆட்டங்களில் 67 வெற்றிகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

இதையும் படிங்க: தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப்: காலிறுதியில் தமிழ்நாடு அதிர்ச்சி தோல்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.