ஐதராபாத்: மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் மிக சுவாரஸ்யத்தக்க அம்சங்களை கொண்டது தான் 20 ஓவர் பார்மட். களத்தில் நொடிக்கு நொடி வெற்றி வாய்ப்பை மாற்றும் திறன் 20 ஓவர் கிரிக்கெட்டு போட்டிக்கு உள்ளது. குறைந்த ஓவர்கள் கொண்ட இந்த பார்மட்டில் சாதனை படைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வீரர் தன்னை மைதானத்தில் நிலை நிறுத்திக் கொண்டு சதம் விளாச போதிய நேரம் இருக்கும். ஆனால் இதற்கு முற்றிலும் மாறுபட்டது தான் இந்த 20 ஓவர் கிரிக்கெட் பார்மட். குறைந்த நேரத்திலேயே ஒரு வீரர் தன்னை மைதானத்தில் நிலை நிறுத்திக் கொண்டு சாகசம் நிகழ்த்த வேண்டி இருக்கிறது.
கடைசியாக வங்கதேசத்திற்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புது வரலாறு படைத்தது. அந்த போட்டியில் 297 ரன்கள் விளாசிய இந்திய அணி டெஸ்ட் விளையாடும் ஒரு அணியின் 20 ஓவர் அதிகபட்சம் என புது சாதனை படைத்து மிரளச் செய்தது.
அந்த ஆட்டத்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சம் அபாரமாக விளையாடிய 111 ரன்கள் குவித்தார். இந்நிலையில், 20 ஒவர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய டாப் 5 அணிகளை கீழ் இருந்து மேல் நோக்கி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
5. இங்கிலாந்து
கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி தரப்பில் ஒட்டுமொத்தமாக 6 சதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பேட்டிங்கில் துணிச்சலான அணுகுமுறையைக் கொண்ட இங்கிலாந்து அணி, பல ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது. வெள்ளை பந்து வடிவத்தில் இங்கிலாந்து வீரர்களின் சமீபத்திய செயல்திறன் மற்றும் புதிய யுக்திகள் அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
4. தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 8 சதங்கள் பதிவாகி உள்ளன. ஒயிட் பால் போட்டிகளில் நன்றாக விளையாடக் கூடிய வீரர்கள் தென் ஆப்பிரிக்க அணியில் அதிகம் உள்ளனர். இருப்பினும், நாக் அவுட் சுற்று பதற்றத்தால் இதுவரை அந்த அணி ஒரு கோப்பையை கூட கைப்பற்ற முடியாமல் திணறி வருகிறது.
3. ஆஸ்திரேலியா
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை உலக கோப்பைகளை வென்ற அணி என்றால் அது ஆஸ்திரேலியா மட்டுமே. இருப்பினும், அந்த அணியால் அதிக டி20 சதங்கள் பட்டியலில் 3வது இடம் மட்டுமே பிடிக்க முடிந்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணி தரப்பில் 20 ஓவர் கிரிக்கெட்டில் 11 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
2. நியூசிலாந்து
இந்த பட்டியலில் சற்று ஆச்சரியம் அளிக்கக் கூடிய அணி என்றால் அது நியூசிலாந்து. சிறந்த யுக்தி, நுட்பம் கொண்ட வீரர்கள் நியூசிலாந்து அணியில் அதிகளவில் உள்ளனர். 20 ஓவர் கிரிக்கெட்டில் அந்த அணி தரப்பில் இதுவரை 12 சதங்கள் விளாசப்பட்டுள்ளன.
1. இந்தியா
இந்த பட்டியலில் இந்திய அணி 19 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது. ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில், விராட் கோலி உள்ளிட்ட இளம் மற்றும் அனுபவம் கலந்த இந்திய அணி சர்வதேச அரங்கில் மற்ற அணிகளுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் புது வரலாறு படைத்துள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவுடன் தோல்வியால் கானல் நீரானதா அரை இறுதி வாய்ப்பு! கணிப்புகள் கூறுவது என்ன? Chance to get semi final for indian women!