சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக வருடம்தோறும் நடத்தப்படும் டிஎன்பிஎல் (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 5ஆம் தேதி தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு போட்டியானது ஜூலை 5ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு சீசனில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு டி.என்.பி.எல் போட்டிக்கான அட்டவணையைத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 5ஆம் தேதி தொடங்கும் போட்டிகளில் 28 லீக் போட்டிகள் பிளே ஆப் சுற்றில் 2 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டி சேலத்தில் நடைபெற இருக்கிறது. அதேபோல் டிஎன்பிஎல் இறுதிப் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரின் போட்டிகள் சென்னை, திருநெல்வேலி, நத்தம் (திண்டுக்கல்), கோயம்புத்தூர், சேலம் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. ஜூலை 5 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் லீக் போட்டிகள் திருநெல்வேலி, நத்தம் (திண்டுக்கல்,) சேலம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடத்தப்படுகின்றன.
பிளே ஆஃப் சுற்று போட்டிகள், தகுதி சுற்று 1 (எலிமினேட்டர்) 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. தகுதி சுற்று 2 மற்றும் இறுதிப் போட்டி சென்னையில் நடத்தப்படும் எனவும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், சென்னை சூப்பர் கில்லிஸ் அணியும் மோதுகின்றன.
இதையும் படிங்க: MI Vs DC: கம்பேக் கொடுக்கும் சூர்யகுமார் யாதவ்! மும்பை ஆட்டம் இனி எப்படி இருக்கும்? - Suryakumar Yadav