ETV Bharat / sports

ப்ரோ கபடி லீக்: "இம்முறை வெற்றி நிச்சயம்" - 'தமிழ் தலைவாஸ்' பயிற்சியாளர் சேரலாதன் நம்பிக்கை! - Tamil Thalaivas team - TAMIL THALAIVAS TEAM

ப்ரோ கபடி லீக் தொடரில் இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்வோம் என தமிழ் தலைவாஸ் அணியின் வியூக பயிற்சியாளர் சேரலாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் தலைவாஸ் அணி
தமிழ் தலைவாஸ் அணி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 10, 2024, 8:34 PM IST

Updated : Sep 10, 2024, 9:39 PM IST

சென்னை: ப்ரோ கபடி லீக் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் சார்பில், அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் உதய்குமார், வியூக பயிற்சியாளர் சேரலாதன், தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்கள் பங்கேற்றனர்.

தமிழ் தலைவாஸ் அணியின் வியூக பயிற்சியாளர் சேரலாதன் பேட்டி (Video Credits - ETV Bharat Tamilnadu)

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் தலைவாஸ் அணியின் வியூக பயிற்சியாளர் சேரலாதன்,"இந்த சீசனிலும் அணியின் கேப்டனாக சாகர் ரதி செயல்படுவார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: செப். 15 இல் விநாயகர் சிலைகளை கரைக்க 4 இடங்களில் அனுமதி! - சென்னை காவல்துறை அறிவிப்பு

"தமிழ் தலைவாஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்ல போராடும் என்றும் கடந்த முறை செய்த தவறுகளை சரி செய்து அணியை பலப்படுத்துவோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், "ஏலம் முறையில் வீரர்களை தேர்வு செய்வதால், தமிழ் தலைவாஸ் அணியில் அதிக தமிழ்நாடு வீரர்கள் எடுக்கப்படுவதில்லை, எனினும் தமிழ்நாடு வீரர்களை தேர்ந்தெடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என்றும் ப்ரோ கபடி லீக்கில் அனைத்து அணிகளிலும் 25க்கும் மேற்பட்ட தமிழ்நாடு வீரர்கள் விளையாடி வருகின்றனர்" என்றும் சேரலாதன் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் சாகர் ரதி, "தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிக்கு நிச்சயம் பாடுபடுவோம்" என தெரிவித்தார்.

Last Updated : Sep 10, 2024, 9:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.