ETV Bharat / sports

சூப்பர் 8 சுற்று: அதிரடி காட்டுமா அமெரிக்கா? - தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்! - T20 World Cup 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 4:52 PM IST

USA vs SA T20 World Cup 2024: லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் சூப்பர் 8 சுற்றுகள் இன்று முதல் தொடங்குகின்றன. இதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா அணி வீரர்களின் கோப்புப்படம்
அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா அணி வீரர்களின் கோப்புப்படம் (Credit - AP Photos)

ஆன்டிகுவா: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதை போல், ஐசிசியின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியது, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொருபுறம், ரசிகர்கள் வியக்கத்தக்க வகையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது அமெரிக்கா. இது அந்த அணியின் கூட்டு முயற்சிக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி என கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தற்போது குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. 20 அணிகள் பங்கேற்ற நடப்பு உலகக் கோப்பை தொடரில் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு அதாவது 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் 2ல் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த நிலையில் இன்று சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் அமெரிக்கா- தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆன்டிகுவா நார்த் சவுண்ட்டில் உள்ள 'சர் விவியன் ரிச்சர்ட்ஸ்' மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டியானது தொடங்குகிறது. வலுவான பாகிஸ்தான் அணியை லீக் சுற்றுடன் வீட்டிற்கு அனுப்பிவிட்டு சூப்பர் 8 சுற்றுக்குள் மாஸாக நுழைந்து இருக்கும் அமெரிக்கா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளையும் அமெரிக்காவில் விளையாடின. தற்போது சூப்பர்-8 போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இதனால் இரு அணிகளில் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் வெஸ்ட் இண்டீஸ்ஸில் உள்ள மைதானங்கள் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான இருக்கும் என்பதால் இரு அணிகளும் கூடுதல் சுழற்பந்துவீச்சாளர்களை களமிறக்கலாம்.

அணியில் மாற்றம்? தென்னாப்பிரிக்கா அணியின் ஆல்-ரவுண்டர் கேசவ் மகராஜ் நேபாளதிற்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. இருப்பினும் இன்றைய போட்டியில் அவர் களமிறங்கப்படலாம் என தெரிகிறது. அதேபோல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய அமெரிக்கா கேப்டன் மோனாங்க் படேலுக்கு திலாக ஆரோன் ஜோன்ஸ் தலைமை ஏற்றார்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் மோனாங்க் படேல் அணிக்கு திருப்ப வாய்ப்புள்ளது. பலம் பொருந்திய தென்னாப்பிரிக்க அணிக்கு அமெரிக்க அணி கொடுக்கக்கூடிய சவால்கள் என்ன? சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வெற்றி வாகை சூடப்போவது யார்? என்பதற்கான விடை இன்னும் சில ம்ணி நேரங்களில் தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்.. ஒப்பந்தமும் நிராகரிப்பு.. கேன் வில்லியம்சன் ஓய்வு முடிவா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.