நியூயார்க்: ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கும் ஆடவர்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (T20 World Cup 2024) வருகின்ற ஜூன் மாதம் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) டி20 உலகக் கோப்பை தொடருக்கான தூதர்களை அறிவித்து வருகின்றது.
அந்த வகையில் ஜமைக்காவைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட்டை முதன் முதலாக தூதராக அறிவித்தது ஐசிசி. இவர் 8 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்க வென்றவர் ஆவார். இரண்டாவது வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த அதிரடி ஆட்டக்கார் கிறிஸ் கெயில் மற்றொரு தூதராக அறிவிக்கப்பட்டார்.
யுவராஜ் சிங்: 2007 ஆம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்த யுவராஜ் சிங்கை, தூதராக அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது ஐசிசி. யுவராஜ் சிங் என்றாலே நம்மில் பலருக்கும் ஞாபகம் வருவது 2007 ஆம் நடைபெற்ற இங்கிலாந்து எதிரான போட்டியில் ஸ்டூவர் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டதுதான் என்றால் அது மிகையாகாது.
இந்த தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை தன்வசப்படுத்தியது. அந்த தொடரில் யுவராஜ் பங்கு இன்றியாமையாத ஒன்றாகும்.
2000ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான யுவராஜ் அதன் பிறகு 304 ஒரு நாள் போட்டிகள், 40 டெஸ்ட் போட்டிகள், 58 டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடியுள்ளார்.
இதற்கிடையில் சில நாள்கள் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த யுவராஜ் சிங் அதிலிருந்து மீண்டு பிறகு சில போட்டிகளில் விளையாடினார், இது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இது குறித்து யுவாராஜ் சிங் பேட்டி ஒன்றில் கூறுகையில்,"டி20 உலகக் கோப்பை விளையாடியதில் எனக்கு சிறந்த நினைவுகள் கிடைத்தன.
அந்த நினைவுகளில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்ததும் இருக்கும். 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன் என்றார். மேலும் நியூயார்க்கில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டிதான் இந்த ஆண்டின் சிறந்த போட்டியாக இருக்கும். புதிய மைதானத்தில் சிறந்த வீரர்கள் பங்கேற்பதைக் காண்பது எனக்குக் கிடைத்த கவுரமாக நினைக்கிறேன்" என்று பேசினார்.
இதையும் படிங்க: "உலக செஸ் சாம்பியன் தொடருக்கான பயிற்சி எப்போது?" - கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பேட்டி!