ETV Bharat / sports

இந்திய கிரிக்கெட் அணியில் புறக்கணிப்பா.. நடராஜன் விளக்கம்! - T NATARAJAN about BCCI

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 2:54 PM IST

Updated : Jul 26, 2024, 4:58 PM IST

T Natarajan: இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை அடுத்தடுத்த வாய்ப்புகள் நிச்சயமாக வரும். அணியில் நான் புறக்கணிக்கப்படுவதாகக் கூறுவது மிகத் தவறானது என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்து உள்ளார்.

கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி
கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி (Credit - Credits - ETV Bharat Tamil Nadu And ANI)

மதுரை: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் தொடரின் நாயகனுமான நடராஜன் தற்போது டிஎன்பில் கிரிக்கெட் தொடரில் 'ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்’ அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு டிஎன்பிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

மதுரையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் நடராஜன் (Video Credit - ETV Bharat Tamilnadu)

இந்நிலையில், மதுரை அண்ணா நகர் பகுதியில் தனியார் உணவக தொடக்க விழாவுக்காக நடராஜன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "தமிழக கிரிக்கெட் அணியில் பல்வேறு திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அடுத்தடுத்த போட்டித் தொடர்களில் நிச்சயம் எனக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்திய கிரிக்கெட் அணியில் நான் புறக்கணிக்கப்படுகிறேன் என்பது தவறான பார்வை. அப்படி ஒருபோதும் கிடையாது. அணியில் இருக்கின்ற அனைத்து வீரர்களும் என்னை அரவணைத்துச் செல்கின்றனர்.

ஐபிஎல் போட்டிகளும் சரி, மாவட்ட அளவில் நடைபெறுகின்ற டிஎன்பிஎல் போட்டிகளும் சரி பல்வேறு திறமையான வீரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நானும் கூட டிஎன்பிஎல் போட்டிகள் மூலமாகவே ஐபிஎல் மற்றும் இந்திய அணி விளையாடும் வாய்ப்பை கிடைக்கப் பெற்றேன்.

டிஎன்பிஎல்-ஐ பொறுத்தவரை, கிராமப்புறத்தில் விளையாடுகின்ற வீரர்களுக்கும் கூட நல்ல வாய்ப்பாகும். இந்தி குறித்து அண்மையில் நான் பேசியதாக வெளிவந்த தகவல் உண்மை அல்ல. நான் எவ்வாறு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தேன் என ஊக்குவிக்கும் வகையில் பேசியதை வேறு மாதிரி எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

முயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவை இருந்தால் எந்த துறையிலும் வெற்றி பெற முடியும். வருங்கால இளைஞர்கள் இதனை தாரக மந்திரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய ஆரம்ப காலத்தில் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் விளையாட்டு குறித்து பெரும்பாலும் அக்கறையற்றவர்களாக இருந்தார்கள்.

ஆனால், இப்பொழுது நிலைமை மாறி உள்ளது. தங்கள் குழந்தைகளின் விருப்பமே மிக முக்கியமானது என எண்ணக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஒரு விளையாட்டு வீரனுக்கு அவரது உடல் தான் மூலதனம். இதனை கருத்தில் கொண்டு உடலை பேணிப் பாதுகாப்பது மிக அவசியம்.

என்னுடைய வாழ்க்கையிலும் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன, அவற்றையெல்லாம் கடந்து தான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். தற்போதைக்கு திரைப்படங்களில் நடிக்கும் எண்ணமெல்லாம் இல்லை" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ் அப் சேனில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் கோலாகல தொடக்க விழா! முதல் நாளில் என்னென்ன நடக்கும்?

Last Updated : Jul 26, 2024, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.