ETV Bharat / sports

MI vs DC: மும்பை அணியில் மீண்டும் சூர்யகுமார் யாதவ்! முதல் வெற்றி பெறுமா? - Suryakumar Back MI

IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாளை (ஏப்.7) நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் களம் காணுகின்றன. இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் களம் காண உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 12:57 PM IST

மும்பை : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஏப்.7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி கேபிட்டல்ஸ் எதிர்கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது.

இழந்தை இடத்தை மீண்டும் பிடிக்க மும்பை அணிக்கு கட்டாயம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி மீது உள்ள அதிருப்தி காரணமாகவே இந்த நிலை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக கடந்த மூன்று ஆட்டங்களிலும் விளையாடாத சூர்யகுமார் யாதவ் நாளை நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் மீண்டும் திரும்புவது மும்பை அணிக்கு புது உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடலிறக்க பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட சூர்யகுமார் யாதவ், ஏறத்தாழ 3 மாத ஓய்வுக்கு பின்னர் மீண்டும் களம் திரும்பி உள்ளார்.

கடைசியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாடி இருந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற உடற்தகுதியை தேர்வில் தேர்ச்சி பெற்ற சூர்யகுமார் யாதவ் மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளார்.

மும்பை அணியை பொறுத்தவரை தொடக்க ஜோடி ரோகித் சர்மா - இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டாலும், இண்னும் பெரிய அளவிலான ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. அதேபோல் மற்ற வீரர்கள் திலக் வர்மா, நமன் திர் ஆகியோரின் ஆட்டமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது.

மறுபுறம், டெல்லி அணியை பொறுத்தவரையில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றியும், 3 ஆட்டங்களில் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி படுதோல்வி அடைந்தது.

அந்த தோல்வியில் இருந்து மீள வேண்டுமெனில் புதிதாக வெற்றி ஒன்றை பெற வேண்டிய நிர்பந்தத்தில் டெல்லி அணி உள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரம் சொந்த மண்ணில் விளையாடுவது மும்பை அணிக்கு கூடுதல் வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : MI Vs DC: கம்பேக் கொடுக்கும் சூர்யகுமார் யாதவ்! மும்பை ஆட்டம் இனி எப்படி இருக்கும்? - Suryakumar Yadav

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.