ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.
- '=
இதனையடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் மாயங்க் அகர்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மாயங்க் அகர்வால் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இளம் வீரர் அபிஷேக் சர்மாவுடன் கைகோர்த்த டிராவிஸ் ஹெட் ஜோடி மும்பை அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 62 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து 63 ரன்களுக்கு அபிஷேக் சர்மா அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் - மார்கரம்வுடன் ஜோடி சேர்ந்து மும்பை அணி பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது ஹைதராபாத் அணி. கிளாசென் 80 ரன்களுடனும், மார்கரம் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இதனையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இது ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது இன்னிங்சில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது ஹைதராபாத் அணி.
- இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது 17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி 263 ரன்களை எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
- இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தமாக 523 ரன்கள் குவித்தது. மேலும் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசியுள்ளானர். இது டி20 கிரிக்கெட் வரலாற்றில் நடக்கும் முதல் நிகழ்வாகும்.
- அதேபோல் இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து 31 பவுண்டரிகளை விளாசியுள்ளது. இது கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் லைன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அடிக்கப்பட்ட 31 பவுண்டரிகளை சமன் செய்துள்ளது.
- இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவின் 17வயதே ஆன இளம் வேகப்பந்து வீச்சாளர் குவேனா மபகா 4 ஓவர்கள் வீசி 66 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் அறிமுக போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: CSK VS GT: ரச்சின்- துபே அதிரடி..குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே! - IPL 2024 CSK VS GT