கொழும்பு: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.2) நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஆக.4) நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரீத் அசலன்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்று நீண்ட நாட்கள் ஆயிற்று. ஆதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் இலங்கை களமிறங்கும். அதேநேரம், இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் நிலையில், அது இலங்கைக்கு எதிராக பதிவு செய்யும் 100வது வெற்றியாகும்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற சிறப்பை இந்தியா பெறும். அதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை. இலங்கை அணி பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல பார்மில் உள்ளது. அதேநேரம் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடந்த ஆட்டத்தில் சொதப்பினர்.
🚨 Toss and Team Update 🚨
— BCCI (@BCCI) August 4, 2024
Sri Lanka elect to bat in the 2nd ODI.
A look at #TeamIndia's Playing XI 👌👌
Follow the Match ▶️ https://t.co/KTwPVvTBCB#SLvIND pic.twitter.com/nEQPhAqP3T
இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஜொலிக்கும் பட்சத்தில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை யாருக்கும் தடுக்க முடியாது என்பதில் சந்தேகமில்லை.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் வருமாறு:
இலங்கை: பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, துனித் வெல்லலகே, அகில தனஞ்சய, அசித்த பெர்னாண்டோ, ஜெப்ரி வான்டர்சே
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
இதையும் படிங்க: ஒரேயொரு வெற்றி தான்.. வரலாறு படைக்கும் இந்தியா! இலங்கையுடன் இன்று மோதல்! - India vs Srilanka 2nd ODI