கொழும்பு: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த ஆக.2ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. பின்னர், 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஆக.4) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்களை குவித்தது.
241 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கியது. 4 வது ஓவரில் ஹெட்ரிக் பவுண்டரிகளை விளாசி அசத்தினார் ரோஹித். 10 ஓவர் முடிவிற்கு 76 - 0 என்ற கணக்கில் விளையாடியது. இதற்கிடையில் ரோஹித் சர்மா அரை சதம் விளாசினார்.
இந்நிலையில் வண்டர்சே வீசிய அபார பந்தில் ரோஹித் அவுட் ஆக, விராட் கோலி களம் கண்டார். நிதானமாக ஆடிய சுப்மன் கில் 35 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஷிவம் துபே, விராட் கோலி எல்பிடபிள்யூ ஆனார்கள். அடுத்தடுத்து இருவிக்கெட்டுகளை இழந்து அணி திணறியது.
களத்தில் அக்சர் பட்டேல் - ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி இருந்தது. இதில், ஸ்ரேயர் ஐயரும் எல்பிடபிள்யூ ஆக இந்திய அணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் கிடைக்காமல் திணறியது. இந்நிலையில் தான் அக்சர் பட்டேல் சிக்ஸ், பவுண்டரி என மாறி மாறி விளாசி அணிக்கு ரன்களை குவித்தார்.
End of a fighting knock from Axar Patel 👏👏
— BCCI (@BCCI) August 4, 2024
He departs for 44 as #TeamIndia need 56 more to win.
Follow the Match ▶️ https://t.co/KTwPVvU9s9#SLvIND pic.twitter.com/b8vrrgodJ4
அக்சர் பட்டேல் அரை சதம் விளாசுவார் என எதிர்பார்த்த நிலையில், அசலங்கா வீசிய அபார பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த அர்ஷதீப் சிங், சிராஜ் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள். அதன்படி 42.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே குவித்தன. இதனால் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.
Sri Lanka win the 2nd ODI by 32 runs.#TeamIndia will look to bounce back in the 3rd and Final #SLvIND ODI.
— BCCI (@BCCI) August 4, 2024
Scorecard ▶️ https://t.co/KTwPVvU9s9 pic.twitter.com/wx1GiTimXp
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 64 ரன்களை குவித்தார். அக்சர் பட்டேல் 44 ரன்களும், சுப்மன் கில் 35 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் ஜெஃப்ரி வன்டர்சே ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகும் வீரர்! என்ன காரணம்? - India vs Sri Lanka ODI