சென்னை: தென்னாப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 தொடர்கள் கொண்ட டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி வெற்றி பெற்றது.
அதன்படி, 2வது டி20 தொடர் இன்று மாலை 7 மணிக்கு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லாரா - டாஸ்மின் ஜோடி களமிறங்கியது. 2வது ஓவரில் டாஸ்மின் 3 பவுண்டரிகளை விளாச, 3வது ஓவரில் லாரா அடுத்தடுத்து ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினர்.
இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கையில் லாரா 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மரிசான் கேப் களம் கண்டார். 6 ஓவர் முடிவிற்கு 66 - 1 என்ற கணக்கில் விளையாடியது. கடைசி மேட்ச்சில் அரை சதம் விளாசிய மரிசான், இந்த போட்டியில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர், அன்னேக் போஷ் களம் கண்டு 40 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில், டாமின்ஸ் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். 13 ஓவர்கள் முடிவிற்கு 110-2 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி விளையாடியது. அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவிற்கு தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 177 ரன்களைக் குவித்தது. இந்த போட்டியில் பூஜா, திப்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்ரேயங்கா பட்டில், ராதா யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இதையும் படிங்க: ஜிம்பாப்வேயை ஊதித் தள்ளிய இந்திய அணி! 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! - Ind vs Zim 2nd T20 Cricket