திண்டுக்கல்: டிஎன்பிஎல் 8வது சீசன் சேலம், கோவை மற்றும் திருநெல்வேலியைத் தொடர்ந்து தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற டபுள் ஹெட்டரின் முதல் போட்டியில் சீகம் மதுரை பேந்தர்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தியது.
191 இலக்கு: முன்னதாக, இந்த சீஸனில் ப்ளேஆஃப்ஸ் வாய்ப்பை ஏற்கனவே இழந்த சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியும் முதல் குவாலிஃபையர் போட்டிக்கான தங்களது இடத்தை உறுதி செய்யும் முனைப்பில் சேப்பாக சூப்பர் கில்லீஸ் அணியும் ஞாயிற்றுக்கிழமை மோதினர்.
Siechem Madurai Panthers end their TNPL 2024 campaign with a win! 👊
— TNPL (@TNPremierLeague) July 28, 2024
📺 Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#CSGvSMP #NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/qLr8n35o7r
இதில் டாஸ் வென்ற சேப்பாக் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக லோகேஷ்வர் மீண்டுமொரு முறை சிறப்பாக விளையாடி 40பந்துகளில் 55 ரன்கள் எடுக்க, அவருக்கு பக்கபலமாக ஜெகதீசன் கௌஷிக் ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார்.
மதுரையின் பேட்டர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி இந்த
சீஸனில் தங்களின் அதிகபட்ச ஸ்கோரை கடைசி லீக்போட்டியில் பதிவு செய்தது. இதனையடுத்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
ஓபனிங் பேட்ஸ்மேன்களாக நாராயண் ஜெகதீசன் - சந்தோஷ் குமார் ஆகியோர் களமிறங்கினர். இதில் நாராயண் ஜெகதீசன் வெறும் 10 ரன்களுக்கு விக்கெட் இழக்க, அடுத்து வந்த கேப்டன் பாபா அபராஜித் 17 ரன்களுக்கு விக்கெட் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
Presenting the Shriram Capital Player of the Match from the #CSGvSMP game today. 🏏
— TNPL (@TNPremierLeague) July 28, 2024
📺 Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/cvmNxnBkqv
போரடி தோல்வி: 3வது விக்கெட்டிற்கு ஓப்பனர் சந்தோஷ் குமார் (48) மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் (52) இணைந்து 78 ரன்களை விரைவாக சேர்த்தனர். இவ்விரு பேட்டர்களின் அதிரடி ஆட்டத்தால் மதுரை பந்துவீச்சாளர்கள் ஸ்தம்பித்தனர்.
பிரதோஷ் ரஞ்சன், டிஎன்பிஎல்லில் தனது 4வது அரைசதத்தைப் பதிவு செய்து சேப்பாக் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். ஆனால், மதுரையின் இளம் சுழற்பந்துவீச்சாளர் கார்த்திக் மணிகண்டன் தனது நுட்பமிக்க பந்துவீச்சால் ஒரே ஓவரில் டாரில் ஃபெராரியோ (3) மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் (6) விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டத்தை மதுரையின் பக்கம் திருப்பினார்.
16வது ஓவரை வீசிய அனுபவ வீரர் முருகன் அஷ்வினும், தன் பங்கிற்கு பிரதோஷ் ரஞ்சன் விக்கெட்டை வீழ்த்த சேப்பாக் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. இறுதியில் சேப்பாக் அணியின் அனுபவ வீரர்களான சதீஷ் மற்றும் அஷ்வின் கிரிஸ்ட் வெற்றிக்காகப் போராடியும்,
அந்த அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தங்களின் கடைசி லீக் போட்டியில் தோல்வியுற்றது. மறுபுறம் சீகம் மதுரை பேந்தர்ஸ் இந்த சீஸனை வெற்றியுடன் நிறைவு செய்து தொடரிலிருந்து வெளியேறியது. ஆட்டநாயகன் விருது மதுரை அணியின் சுரேஷ் லோகேஷ்வருக்கு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியா மேலும் 3 பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு.. போட்டிகளின் முழு விவரம்!