ஐதராபாத்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டு உள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
Squad: Ꮪhubman Gill (Captain), Yashasvi Jaiswal, Ruturaj Gaikwad, Abhishek Sharma, Rinku Singh, Sanju Samson (WK), Dhruv Jurel (WK), Nitish Reddy, Riyan Parag, Washington Sundar, Ravi Bishnoi, Avesh Khan, Khaleel Ahmed, Mukesh Kumar, Tushar Deshpande.#TeamIndia | #ZIMvIND
— BCCI (@BCCI) June 24, 2024
இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஜூலை 6ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 7, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மற்ற நான்கு டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுகின்றன.
இந்த போட்டிகள் அனைத்தும் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையல், ஜிம்பாப்வே டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வு கமிட்டி குழு இந்திய அணியை அறிவித்துள்ளது.
அதன்படி கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, ஆல்-ரவுண்டர் ரியான் பராக், இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா, விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் ஆகியோர் முதல் முறையாக அணியில் இடம் பிடித்துள்ளனர். மேலும் மற்றொரு விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்களின் ஆவெஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார் உள்ளிட்டோரும் சுழற்பந்து வீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷனாய், ஆகியோரும் இடம் பிடித்து உள்ளனர். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் பெயர்களும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளன.
சீனியர் வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி பின் வருமாறு.
இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவெஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.
இதையும் படிங்க: வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்.. தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தது! - T20 World CUP 2024