ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ஷிகர் தவான் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். கடைசியாக அவர் கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.
38 வயதான ஷிகர் தவான் கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இடது கை தொடக்க ஆட்டக்காரரான தவான் இதுவரை 34 டெஸ்ட், 68 டி20 மற்றும் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 10 ஆயிரத்து 867 ரன்கள் குவித்து உள்ளார்.
மேலும், தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியவர் ஷிகர் தவான். சர்வதேச கிரிக்கெட் தவிர்த்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ஷிகர் தவான், இதுவரை 222 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6 ஆயிரத்து 769 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர்.
கடந்த 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணி கைப்பற்ற முக்கிய காரணியாக இருந்தவர் ஷிகர் தவான். இந்நிலையில், தனது வாழ்க்கை கதையை திரைப்படமாக எடுத்தால் அதில் கதாநாயகனாக யார் நடிக்க வேண்டும் என ஷிகர் தவான் மனம் திறந்துள்ளார்.
அக்ஷய் குமார் அல்லது ரன்வீர் சிங் ஆகிய இருவரில் ஒருவர் தனது கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என ஷிகர் தவான் கோரியுள்ளார். அதேநேரம் வாய்ப்பு கிடைத்தால் தனது கதையில் தான் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறி உள்ளார். இதுகுறித்து பேசிய ஷிகர் தவான், "என் வாழ்க்கை கதை திரைப்படமாக எடுக்கப்படுவதை விரும்புகிறேன், அது நன்றாக இருந்தால் மட்டுமே.
என்னைப் பொறுத்தமட்டில், படத்திற்கு மதிப்பு சேர்க்கும் வகையில் வாய்ப்பு கிடைத்தால் அதை மகிழ்ச்சியுடன் செய்வேன். மற்ற நடிகர்களைப் பொறுத்தவரை, அக்ஷய் குமார் அல்லது ரன்வீர் சிங்கிடம் உள்ள முழு ஆற்றலில் எனது கதையில் நடிக்க நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஓய்வுக்குப் பிறகு தனது புகழை இழக்க நேரிடும் என்று பயப்படுகிறீர்களா என்று கேட்டால் ரசிகர்கள் எனன்னை தொடர்ந்து நேசிப்பார்கள் என்றும், தனது ரசிகர் பட்டாளம் மேலும் வளரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: புட்பாலுக்கு முழுக்கு இப்ப இது தான் டிரெண்டு? வைரலாகும் தோனி வீடியோ! - MS Dhoni Badminton Video