ஐதராபாத்: 20 ஓவர் உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் தான் இந்த சாதனை படைக்கப்பட்டு உள்ளது. ஆசிய ஓசியானா கடற்பகுதியில் உள்ள குட்டி நாடு தான் சமோவா. அந்நாட்டை சேர்ந்த டேரியஸ் விசர் இந்த சாதனையை படைத்துள்ளார். டேரியஸ் விசர் ஒரு ஓவரில் 6 சிக்சர் உள்பட 39 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் டேரியஸ் விசர். இதற்கு முன் 2007ஆம் ஆண்டு யுவராஜ் சிங், 2021ஆம் ஆண்டு கிரென் பொல்லார்ட், 2024ஆம் ஆண்டு திபேந்திர சிங் ஏரீ, அதே ஆண்டில் நிகோலஸ் பூரான் ஆகியோர் டி20 பார்மட்டில் ஒரே ஓஒவரில் 36 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருந்தனர்.
🚨WORLD RECORD CREATED IN MEN’S T20 LEVEL 1 OVER 39 RUNS
— SportsOnX (@SportzOnX) August 20, 2024
Darius Visser scored 39 runs in match between Samoa Vs Vanuatu
(🎥 - ICC)#T20 #T20WorldCup #records #ICC #CricketUpdate #cricketnews pic.twitter.com/sXiyrlxjtE
இந்நிலையில் இவர்கள் அனைவரது சாதனையையும் டேரியஸ் விசர் தவுடுபொடியாக்கி புது உலக சாதனையை படைத்துள்ளார். மேலும், அந்த ஆட்டத்தில் 62 பந்துகளில் 132 ரன்களை டேரியஸ் விசர் எடுத்துள்ளார். இதன் மூலம் சமோவா நாட்டின் தரப்பில் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் வீரர் என்ற புது சாதனையையும் டேரியஸ் விசர் படைத்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் அதே ஓசியானா கடற்பகுதியில் உள்ள வனுவாடு என்ற நாட்டுக்கு எதிராக டேரியஸ் விசர் இந்த ரன்களை குவித்துள்ளார். இந்த ஆட்டத்தின் இறுதியில் சமோவா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய வனுவாடு, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சீக்கிரமாக வெளியேறியது.
இறுதியில் சமோவா 10 ரன்கள் வித்தியாசத்தில் வனுவாடுவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பந்துவீச்சிலும் டேரியஸ் விசர் ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். வனுவாடு நாட்டின் ரொனால்ட் டாரி என்பவரின் விக்கெட்டையும் கைப்பற்றி டேரியஸ் விசர் புது மைல்கல் படைத்தார். முன்னதாக ஆட்டத்தின் 15வது ஓவரை வீசிய வனுவாடு நாட்டின் பவுலர் நலின் நிபிகோ அதில் மூன்று நோ பால் உள்பட 6 சிக்சர்களை வழங்கினார்.
Darius Visser creates history after smashing most runs in an over in Men’s T20Is 💥
— ICC (@ICC) August 20, 2024
Read on ➡️ https://t.co/19hSJuDml5 pic.twitter.com/7ptxoDRxfU
இதன் மூலம் ஒரே ஒவரில் அவர் 39 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இந்த ஆட்டத்தில் டேரியஸ் விசர் மொத்தம் 5 பவுண்டரி மற்றும் 14 சிக்சர்களை விளாசித் தள்ளினார். இதற்கு முன்னதாக கடந்த 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் 6 சிக்சர்கள் விளாசி முதல் முறையாக சாதனை படைத்தார்.
அதன்பின் 2021 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிரென் பொல்லார்ட் அதேபோல் ஆறு சிக்சர்கள் விளாசினார். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் நேபாளம் வீரர் திபேந்திர சிங் ஏரீ ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ் மற்றும் அமெரிக்க வீரர் ஜஸ்கரன் மல்ஹோத்ரா ஆகியோர் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: யுவராஜ் சிங் வாழ்க்கை படத்தில் தமிழ் நடிகர்? யார் தெரியுமா? - Yuvraj Singh biopic