சண்டிகர்: ஐபிஎல் தொடரின் 37வது போட்டி இன்று சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் குஜராத் டைடன்ஸ் அணியும், 9வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக கேப்டன் சாம் கரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினர். தொடக்க கூட்டணி களத்தில் நீடித்தது போல, அதன் பின் சேர்ந்த எந்த கூட்டணியும் நீடிக்கவில்லை.
பவர்ப்ளேவில் அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து வெளியேறினார். குஜராத்தின் சுழலைச் சமாளிக்க முடியாத பஞ்சாப் அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. கேப்டன் சாம் கரன் 20, ரிலீ ரோசோவ் 9, ஜிதேஷ் சர்மா 13, லிவிங்ஸ்டன் 6 என விக்கெட்டை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது.
இதையடுத்து, கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களைச் சேர்த்த ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா களத்தில் நீடிப்பார்கள் என்று நினைத்த நேரத்தில், அவர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஷஷாங்க் சிங் 8, அசுதோஷ் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில், ஹர்ப்ரீத் ப்ரார் 29 ரன்கள் அடிக்க, பஞ்சாப் அணி ஒரு மதிப்புமிக்க ரன்களைப் பெற்றது.
இதன்படி, 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மற்ற பந்துவீச்சாளரான ரஷித் கான் மற்றும் நூர் அகமத் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், மொஹித் சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, குஜராத் அணி 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: 80 பவுன் தங்கச் செயின் பரிசா?.. உற்சாகத்தில் யாக்கர் கிங் நடராஜன்! - NATARAJAN Got Gold Chain