ஐதராபாத்: ஓய்வு பெற்ற போதும் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக சச்சின் தெண்டுல்கர் இருக்கிறார். தற்போதைய பேட்ஸ்மேன்கள் கூட சச்சின் தெண்டுல்கரின் பேட்டிங் ஸ்டைல் குறித்து பெரிதும் பேசும் அளவுக்கு அவரது பேட்டிங் திறன் உள்ளது. சரியான நேரத்தில் ஷாட்டுகளை அடிப்பது உள்ளிட்ட சச்சினின் பேட்டிங் நுணுக்கங்கள் இன்றைய கால இளம் வீரர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், தனடு காலத்தில் ரிவர்ஸ் ஸ்விங் வீசக் கூடிய பந்துவீச்சாளர்களை எவ்வாறு சமாளித்து ரன்களை குவித்தேன் என்பது குறித்து சச்சின் தெண்டுல்கர் மனம் திறந்துள்ளார். சர்வதேச அளவில் வாக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம், டெல் ஸ்டெயின், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் உமர் குல் ஆகிய ரிவர்ஸ் ஸ்வீங் பந்துவீசக் கூடிய வீரர்களை சச்சின் தெண்டுல்கர் எதிர்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ரிவர்ஸ் ஸ்விங் முறையை எப்படி எதிர்கொள்வது, அதற்காக எவ்வாறு பயிற்சி எடுக்க வேண்டும் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "ரிவர்ஸ் ஸ்விங்கை நன்றாக விளையாடுவதற்கு பந்தின் ஒரு பக்கத்தை சுற்றி டேப்பை சுற்றிக் கொண்டேன்.
Legendary cricketer Sachin Tendulkar wowed the crowd with his inspiring speech at the ISPL S2 launch event! 🏏✨ #SachinTendulkar #ISPLSeason2 #Cricket pic.twitter.com/BfyiCxag2z
— Media Buzz India (@media_buzz_in) August 18, 2024
நான் விளையாடும் நாட்களில், பந்தின் ஒரு பக்கத்தை டேப் மூலம் சுற்றி பளபளப்பாக்கிக் கொள்வேன். அதைக் கொண்டு விளையாடும் போது கடினமான பக்கம் எது பளபளப்பான பக்கம் எது என அறிந்து அதற்கு ஏற்றார் போல் கவனித்து விளையாடும் போது ரிவர்ஸ் ஸ்விங் முறையை எளிதில் எதிர்கொள்ள முடியும்.
டென்னிஸ் பந்தில் ஒரு பக்கம் டேப் சுற்றிக் கொண்டு அதை வைத்து ரிவர்ஸ் ஸ்வீங் பயிற்சி மேற்கொண்டு அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாரானேன்" என்று தெரிவித்துள்ளார். இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடருக்கான ட்ரெயல் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அந்த விழாவில் கலந்து கொண்ட சச்சின் தெண்டுல்கர் இதனை தெரிவித்தார்.
மேலும், விரைவில் பெண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் பிரீமியம் லீக் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இரண்டாம் ஆண்டு இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2வது ஆண்டாக பிக் பாஷ் லீக்கை புறக்கணிக்கு ரஷீத் கான்! என்ன காரணம் தெரியுமா? - Rashid Khan skip Big Bash League