பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் கோலாகல தொடக்க விழாவுடன் தொடக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பாராலிம்பிக்ஸ் தொடரில் இன்று (ஆக.31) நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (எஸ்ஹெச்1) பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் பங்கேற்றார். முதல் சீரிஸில் 50.0 புள்ளிகளைப் பெற்ற ரூபினா பிரான்சிஸ் இரண்டாம் இடம் பிடித்தார். 2-வது சீரிஸில் 97.6 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்தார்.
BRONZE 🥉 For INDIA 🇮🇳
— Doordarshan Sports (@ddsportschannel) August 31, 2024
Rubina Francis wins bronze medal in the Women's 10m Air Pistol SH1 Final with a score of 211.1⚡️#Paris2024 #Cheer4Bharat #Paralympic2024 #ParaShooting@mansukhmandviya @MIB_India @PIB_India @IndiaSports @ParalympicIndia @PCI_IN_Official @Media_SAI… pic.twitter.com/iSBUZ6KNS7
தொடர்ந்து முந்துவதும், பின்தங்குவதுமாக இருந்த அவர், இறுதியில் 211.1 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். இதில் ஈரான் வீராங்கனை சரே ஜவன்மார்டி 236.8 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். துருக்கி வீராங்கனை ஐசென் ஓஸ்கல் 231.1 புள்ளிகளைப் பெற்று வெள்ளி வென்றார்.
துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை ரூபினா வெண்கலம் பதக்கம் வென்றதை அடுத்து பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியா வென்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது. முன்னதாக நேற்று (ஆக.30) நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர்.
மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் இந்தியாவின் ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் இந்தியாவின் மணிஷ் நார்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றுள்ளார். ஆக மொத்தம் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் இந்தியா 5 பதக்கங்களை வென்று உள்ளது.
இதைஒயும் படிங்க: Important: கார் பந்தயம் பாக்கப் போறீங்களா! மறக்கமாக இத படிங்க! - chennai Formula 4 car Race