பெங்களூரு: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.12) இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 62வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் பட்டேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பெங்களூரு அணி தனது இன்னிங்ஸ்ஸை தொடங்கியது.
அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக, விராட் கோலி - டு பிளெசிஸ் ஜோடி களமிறங்க, வந்த வேகத்தில் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார் டு பிளெசிஸ். பின்னர், வில் ஜாக்ஸ் களமிறங்க, கோலி வெறும் 27 ரன்கள் எடுத்து தனது ஆட்டத்தை இழக்க, பெங்களூரு அணி 3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
களத்தில் வில் ஜாக்ஸ் - ரஜத் படிதார் ஜோடி விளையாடியது. 8 ஓவர் முடிவிற்கு 87 - 2 என்ற கணக்கில் பெங்களூரு அணி விளையாடியது. ரஜத் படிதார் அரை சதம் விளாச, 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், கேமரூன் கிரீன் களமிறங்கினார். வில் ஜாக்ஸ் அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குல்தீப் வீசிய பந்தில் அவுட் ஆனார்.
பின்னர், மஹிபால் லோமரோர் (Mahipal Lomror) களமிறங்கினார். 17வது ஓவரில் பெங்களூரு அணிக்கு 3 சிக்ஸ்ஸர்கள் கிடைத்தன. லோமரோர் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆக, அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் சென்றனர். 20 ஓவர் முடிவிற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், அதிகபட்சமாக ரஜத் படிதார் 52 ரன்களும், வில் ஜாக்ஸ் 41 ரன்களும், கிரீன் 32 ரன்களும் குவித்தனர். டெல்லி கேப்பிட்டஸ் அணியில், கலீல் அகமது, ராஷிக் சலாம், 2 விக்கெட்டுகளையும், இஷாந்த், குல்தீப் யாதவ், முகேஷ்குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதையும் படிங்க: சென்னை அபார வெற்றி! 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது! - IPL 2024 CSK Vs RR Match Highlights