ETV Bharat / sports

திக் திக் நிமிடங்கள்.. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி தகுதி! இறுதி வரை போராடிய சென்னை அணி தோற்க காரணம்? - CSK vs RCB

CSK vs RCB Highlights: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி ரன் - ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று 9வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Players of CSK vs RCB Match
ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணி வீரர்கள் புகைப்படம் (Credits: APTN)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 8:12 AM IST

பெங்களூரு: நாடு முழுவதும் ஐபிஎல் போட்டி பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் நடந்து வருகிறது. இதன் 68வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை செய்தன.

இதில், முதல் மூன்று ஓவர்களில் பெங்களூரு அணி 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால், மழை நின்ற பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் களமிறங்கிய விராட் கோலி, டு பிளெசிஸ் அகியோர் களத்தில் நிதானத்துடன் ஆடிய நிலையில், 39 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் அடித்து 54 ரன்களில்

அரைசதம் எடுத்து பிளெசிஸ் திடீரென ஆட்டமிழந்தார். விராட் கோலி 29 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர் என 47 ரன்கள் எடுத்திருந்தபோது, மிட்செல் சாண்ட்னெரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.

பின்னர் வந்த கேமரூன் கிரீன் மற்றும் பட்டிதார் ஆகியோர் சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில், பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை குவித்திருந்தது. இதில், சென்னை அணியின் தாக்கூர், சாண்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தனர். இந்த சீசனில் பெங்களூரு அணி 200 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 6வது முறையாகயாகும்.

இதையடுத்து, 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்வாட்(0) ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினார். இவரது ஜோடியாக ஆடிய டேரில் மிட்செல் 4 ரன்கள் மட்டும் எடுத்து அவுட்டாகினார். பின்னர் 2.2 ஓவரில் சென்னை அணி 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்தடுத்து களமிறங்கியவர்களில் ரச்சின் ரவீந்திரா 37 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர் என 61 ரன்களை குவித்தார். அடுத்த ஓவரில் பேட்டிங் செய்த ஷிவம் துபே 7 ரன்களே குவித்தார். பின்னர், கைக்கோர்த்த தோனி, ஜடேஜா ஆகியோர் அதிரடியாக ஆடினர். இதில், தோனி கடைசி ஓவரில் வீசிய முதல் பந்தை 110 மீட்டர் உயரம் வரை ஒரு ஹெலிகாப்டர் ஷாட் அடித்து ரசிகர்கர்களை குஷிப்படுத்தினார். பின்னர், அவர் 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேட்ச் கொடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.

பின்னர், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை அணி தோல்வியை தழுவியது. இதனால், பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், மேக்ஸ்வெல், முகமது சிராஜ் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டும், யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் 14 வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூரு அணி, 7வது வெற்றியைப் பெற்று 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 7வது தோல்வியை சந்தித்த சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 14வது இடத்தில் உள்ளது.

இந்த இரண்டு அணிகளும் சம புள்ளிகளில் இருந்தாலும் கூட, இப்போட்டியின் மூலம் சென்னை அணியை பின்னுக்குத் தள்ளிய பெங்களூரு அணி 9வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதனால், சென்னை அணி அடுத்தச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது. லீக் சுற்றுடன் வெளியேறுவது சென்னை அணிக்கு இது 3 வது முறையாகும்.

இதையும் படிங்க: இன்றைய சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்? - CSK VS RCB

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.