ETV Bharat / sports

"விராட் கோலிக்கிட்ட கேட்டா அவரே ஒப்புக்கொள்குவார்" கம்பீர் கருத்துக்கு பாண்டிங் பதிலடி!

விராட் கோலி குறித்த தனது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுதம் கம்பீருக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விளக்கம் அளித்துள்ளார்.

Etv Bharat
Gautam Gambhir - Ricky Ponting (( Source: AP (Left), Getty Images (Right ))
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 13, 2024, 1:31 PM IST

ஐதராபாத்: வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. குறிப்பாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு அரை சதம் உள்பட வெறும் 93 ரன்களை மட்டுமே விராட் கோலி எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விராட் கோலி எப்படி சமாளிப்பார் என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கின. இதனை காரணமாக வைத்து ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் பலரும் தங்களின் விமர்சனங்களை முன் வைக்க தொடங்கினர். அப்போது ரிக்கி பாண்டிங், கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலி வெறும் 2 சதங்களை மட்டுமே அடித்துள்ளார்.

வேறு எந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தாலும், இத்தனை காலம் ஒரு அணியில் வாய்ப்பு கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுவார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான விளையாடுவதை விராட் கோலி அதிகம் விரும்பக் கூடியவர் என்று கூறியிருந்தார்.

விராட் கோலியை மனதளவில் பலவீனப்படுத்தும் முயற்சியாகவே ரிக்கி பாண்டிங் விமர்சனங்கள் பார்க்கப்பட்டன. இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரடியாக பதில் அளித்தார். அதில், இந்திய கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங்கிற்கு என்ன வேலை இருக்கிறது. ஆஸ்திரேலியா அணியை பற்றி கவலை கொள்ளட்டும்.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் மனதளவில் கடினமான வீரர்கள். அதனால் அவர்களின் ஆட்டத்தை பற்றி கவலைப்பட போவதில்லை. இந்திய அணிக்காக ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர். எதிர்காலத்தில் இன்னும் அதிக சாதனைகள் படைப்பார்கள் என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா மண்ணில் களமிறங்குவதற்கு முன்பாகவே கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. கம்பீரின் கருத்து குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் இருந்து அப்படியொரு பதில் வரும் என்று நினைக்கவில்லை, ஆனால் கம்பீரின் குணத்தை கொஞ்சம் அறிவேன். கோபக்காரரான கம்பீர் அப்படி பதில் அளித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

விராட் கோலியை நான் எந்த வகையிலும் திட்டவோ, தரக்குறைவு மதிப்பீடு செய்யவோ இல்லை. அவர் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். மோசமான பார்மில் இருந்தாலும் கம்பேக் கொடுப்பார் என்றே கூறியிருந்தேன். எனது கருத்து குறித்து விராட் கோலியிடம் கேட்டால் கூட அவரே ஒப்புக் கொள்வார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி புறக்கணிப்பு: ஐசிசி தடை, $65 மில்லியன் இழப்பு - பாக். எதிர்கொள்ளும் சவால்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.