ETV Bharat / sports

"ஆர்சிபிக்கு கப் அடிப்பதுதான் என் கனவு" - தினேஷ் கார்த்திக்! - Dinesh Karthik - DINESH KARTHIK

"ஆர்சிபி அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அதற்கு முயற்சி செய்வேன்" என அந்த அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 17, 2024, 10:49 PM IST

சென்னை: சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் லெஜண்ட்ரி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் (southern superstars) அணிக்கான ஜெர்சி மற்றும் வீரர்கள் அறிமுகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மைக்கேல் பெவன் (ஆஸ்திரேலியா), தினேஷ் கார்த்திக், பார்தீவ் பட்டேல், கேதர் காதவ் மற்றும் நடிகை ஐஸ்வரியா ராஜேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தினேஷ் கார்த்திக் பேசியதாவது, “லெஜண்ட்ரி கிரிக்கெட் ஓய்வு பெற்ற வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் முக்கியமான கிரிக்கெட் தொடராக அமையும். இதன் மூலம் நிறைய திறமைசாளிகளை உருவாக்கவும் முடியும். வரும் காலங்களில் கிரிக்கெட்டில் பெண்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இதனால், பெண்கள் தைரியமாக கிரிக்கெட்டை தேர்வு செய்யலாம்.

இதையும் படிங்க: ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டித் தூக்கிய இந்திய ஹாக்கி அணி! - ஐந்தாவது முறை சாம்பியனாகி அசத்தல்

ஆர்சிபி அணியில் கடந்த 3 வருடங்கள் விளையாடியது மகிழ்ச்சி. இந்த அணியில் பேட்டிங் பயிற்சியாளராக இணைவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆர்சிபிக்கு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பது கனவு. அதற்கு முயற்சி செய்வேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் எனது ஆசை. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டது மிகவும் வரவேற்கதக்கது. அவற்றைக் காண மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன். இந்திய அணியின் பயிற்சியாளராகும் ஆசை இப்போதைக்கு இல்லை என்றாலும், ஒருநாள் நடக்கும்” இவ்வாரறு அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.