ETV Bharat / sports

மீண்டும் கம்பேக் கொடுப்போம் - சிஎஸ்கே! ஐபிஎல்லில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே நம்பிக்கை - RCB vs CSK - RCB VS CSK

RCB vs CSK Highlights: ஐபிஎல் தொடரின் 68வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்டது.

RCB vs CSK Players in IPL Match At Bengaluru Chinnaswamy ground
சிஎஸ்கே vs ஆர்சிபி அணி வீரர்கள் (Credits: APTN)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 10:30 AM IST

பெங்களூரு: ஐபிஎல் போட்டியின் 68வது லீக் ஆட்டம், பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை செய்தன.

பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான போட்டி என்பதால் இரு அணிகளும் தங்களது முழுப் பலத்தையும் இப்போட்டியில் காட்டின. இதனால், இப்போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார் என்பது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்வு செய்தார். ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. இரு அணிகளுக்கான வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-

பெங்களூரு அணி: ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(விகீ), கர்ண் ஷர்மா, யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், முகமது சிராஜ்.

சென்னை அணி: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(விகீ), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்ஷனா.

தொடக்க வீரர்களான விராட் கோலி, பிளெசிஸ் ஆகியோர் சென்னை அணியின் பந்து வீச்சாளர் தூஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டும் எடுத்திருந்தினர். இப்போட்டியில், சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி 11 ஓவர்கள் முடிவில் 98 ரன்கள் எடுத்தபோது, ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் பட்டிதார் நிதானமாக களத்தில் நின்று ஆடினர்.

அட்டகாசமாக விளையாடிய கேப்டன் டு பிளெசிஸ் அரைசதம் விளாசினார். பின்னர், 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பட்டிதார் அடித்த பந்து, பந்து வீச்சாளரின் முனையில் உள்ள ஸ்டெம்பில் பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த மூன்றாவது நடுவர் பிளெசிஸ் ரீச்சிற்குள் இல்லாததால் அவர் அவுட் ஆகியதாக கூறியதால் அவுட் என்ற முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

14 ஓவர்கள் முடிவில், பெங்களூரு அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், தாக்கூர் வீசிய பந்தில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து பட்டிதார் அவுட்டாகினார். இறுதியாக, 20 ஓவர் முடிவில் சென்னை அணிக்கு 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பவர் பிளே ஆட்டத்தின் 6 ஓவர் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்தது. அப்போது, ரஹானே 22 மற்றும் ரவீந்திரா 23 ரன்களுடன் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்கள் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. ரஹானே 25 மற்றும் ரவீந்திரா 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர். அடுத்து கைக்கோர்த்த தோனி, ஜடேஜா ஆகியோர் அதிரடியாக ஆடினர். அப்போது, தோனி கடைசி ஓவரில் பந்தை 110 மீட்டர் உயரம் வரை ஒரு ஹெலிகாப்டர் ஷாட் என அடித்து விளாசினார். இதையடுத்து, தோனி 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேட்ச் கொடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 191 ரன்களே எடுத்து இருந்தது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. மேலும், பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.புள்ளிப்பட்டியலில் இரண்டு அணிகளும் சமமாக இருந்தாலும், ரன் - ரேட் அடிப்படையில், பெங்களூரு அணி, சென்னை அணியை பின்னுக்கு தள்ளி 9வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ருசித்தது. இதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது 3 வது முறையாகும்.

இதையும் படிங்க: திக் திக் நிமிடங்கள்.. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி தகுதி! இறுதி வரை போராடிய சென்னை அணி தோற்க காரணம்? - CSK Vs RCB

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.