டெல்லி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பார்படோசில் நேற்று (ஜூன்.29) நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுதாக விராட் கோலி அறிவித்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் 20 ஓவர் பார்மெட்டில் இருந்து விடை பெறுவதாக கூறினார். இந்நிலையில், ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Ravindra Jadeja announces T20I retirement, a day after the T20 World Cup title win against South Africa in Barbados.
— IANS (@ians_india) June 30, 2024
“With a heart full of gratitude, I bid farewell to T20 internationals. Like a steadfast horse galloping with pride, I’ve always given my best for my country and… pic.twitter.com/FZjKyKNLYx
இது தொடர்பாக ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இதயம் நிறைந்த நன்றியுடன், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரையைப் போல் பெருமையுடன் துள்ளிக் குதிப்பதைப் போல, நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன். மற்ற வடிவங்களில் அதைத் தொடர்ந்து செய்வேன்" என்று இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: 2007ல் தோல்வி.. 2024ல் வெற்றி! வீழ்ந்த இடத்தில் வென்று சாதித்த ராகுல் டிராவிட்! - Rahul Dravid