ETV Bharat / sports

ஜெய்ஸ்வால் அபார சதத்தில் மும்பை அணியின் பந்துவீச்சை ஊதித் தள்ளிய ராஜஸ்தான்! - IPL 2024 MI vs RR - IPL 2024 MI VS RR

IPL 2024 MI vs RR: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

ஜெய்ஸ்வால் அபார சதத்தில் மும்பை அணியின் பந்துவீச்சை ஊதித் தள்ளிய ராஜஸ்தான்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 7:50 AM IST

ராஜஸ்தான்: 17வது ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா 6 ரன்களில் வந்த வேகத்தில் அவுட்டானார்.

அதேபோல் இஷான் கிஷன், சந்தீப் சர்மா பந்தில் டக் அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் திலக் வர்மா அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். மறுமுனையில் முகமது நபி பொறுமையாக விளையாடி 23 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய வதேரா அதிரடியாக விளையாடி 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ட்ரெண்ட் போல்ட் மெதுவாக வீசிய பவுன்சரில் அவுட்டானார்.

கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாண்டியா 10 ரன்களில் அவேஷ் கான் பந்தில் அவுட்டாகி ஏமாற்றினார். பின்னர் தொடர்ந்து வந்த டிம் டேவிட் வெறும் 3 ரன்களெ எடுத்தார். இறுதியாக, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் எடுத்தார்.

ராஜஸ்தான் அணியில் பலமான பேட்டிங் ஆர்டர் உள்ளதால் இந்த இலக்கை எளிதில் அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் அதிரடியாக ஆடினர். இந்த நேரத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கிய போது ஜாஸ் பட்லர் 35 ரன்களில் சாவ்லா பந்தில் போல்டானார்.

பின்னர், களமிறங்கிய சஞ்சு சாம்சன் அணியின் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார். மறுபக்கம் அதிரடியை தொடர்ந்த ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். சாம்சன் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இறுதியாக, 18.4 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி முதல் இடத்தை தக்க வைத்தது.

இதையும் படிங்க: "தோல்வியால் துவளவில்லை" கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் குகேஷின் வெற்றி ரகசியம் - Indian Grandmaster Gukesh

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.