ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரின் 24வது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குஜராத் டைட்டஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அந்த வகையில் ராஜஸ்தான் அணி தனது இன்னிங்ஸ்ஸைத் தொடங்கியது. தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். 3வது ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விளாசினார். 5வது ஓவரில் ஜெய்ஸ்வால் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர், ஜோஸ் பட்லருடன் சஞ்சு சாம்சன் களம் கண்டார். 10 ஓவர் முடிவிற்கு 73-2 என்ற கணக்கில் விளையாடியது. சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து அணிக்கு ரன்களை குவித்தனர். இந்த போட்டியில் பராக் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் தனது அரை சதத்தைப் பதிவு செய்தனர். ரியான் பராக் 76 ரன்கள் எடுத்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைக் குவித்தது. இந்த போட்டியில் உமேஷ், ரஷித் கான், மோஹித் ஷர்மா ஆகிய மூவரும் தலா 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது குஜராத் அணி. அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரின் 2வது பந்தில் சாய் கிஷோர் தனது முதல் பவுண்டரியை விளாசினார்.
இருவரும் இணைந்து பவர் ப்ளேயில் சிறப்பாக விளையாடினர். சாய் சுதர்சன் 35 ரன்கள் எடுத்து 8 வது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். 10 ஓவர் முடிவிற்கு 76-1 என்ற கணக்கில் குஜராத் அணி விளையாடியது. குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற இன்னும் 114 ரன்கள் தேவையாக இருக்கிறது.
இதையும் படிங்க: பஞ்சாப் வெற்றி பெற 183 ரன்கள் இலக்கு… தொடர் வெற்றியை தக்கவைக்குமா ஹைதராபாத்? - SRH Vs PBKS