பெங்களூரு: ஐபிஎல் போட்டியின் 15வது லீக் ஆட்டம் இன்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி லக்னோ அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், குயிண்டன் டி காக் களம் இறங்கினர். சற்று நல்ல தொடக்கத்தை கொடுத்த இந்த கூட்டணி 6வது ஓவரில் மெக்ஸ்வெல் பந்து வீச்சில் பிருந்தது. கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து படிக்கல் 6 ரன்களிலும், ஸ்டோனிஸ் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்தாலும் மறுபக்கம் டி காக் அணிக்கு ரன்களை சேர்ந்து வந்தார். அவரும் தனது 22வது ஐபிஎல் அரைசதத்தை எட்டினார்.
ஒரு கட்டத்தில் டி காக் 81 ரன்களில் டாப்லி பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, இறுதி வரை பூரான் களத்தில் நின்று அணிக்கு ரன்களை சேர்த்தார். லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் மெக்ஸ்வெல் 2 விக்கெட்களும், மற்ற பந்து வீச்சாளர்களான சிராஜ், டாப்லி, யாஷ் தயாள் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றது.
இதையும் படிங்க: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்! என்ன காரணம்? - Ben Stokes Ruled Out T20 World Cup