டொரன்டோ : 2024 செஸ் கேண்டிடேட் தொடர் கனடாவின் டொரன்டோவில் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. தமிழக வீரர் பிரக்ஞானந்தா, மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தியை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே தடுப்பு ஆட்டத்தில் குஜராத்தி ஆடிய நிலையில் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பிரக்ஞானந்தா சிறப்பான காய் நகர்த்தலின் மூலம் ஆட்டத்தை தன் பக்கம் திருப்பி வெற்றியும் பெற்றார்.
மற்றொரு இந்திய வீரர் குகேஷ், ரஷயாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டம் இறுதியில் சமனில் முடிந்தது. மற்றொரு தமிழக வீராங்கனையும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலி, பல்கேரியாவை சேர்ந்த நூர்கியுல் சலிமோவா என்பவரை எதிர்கொண்டார்.
அபாரமாக விளையாடிய வைஷாலி, இறுதியில் நூர்கியுல் சலிமோவா வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிட் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரேனை எதிர்கொள்ளும் வீரரை தேர்வு செய்வதற்கான கேன்டிடேட் செஸ் தொடர் தான் தற்போது கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவை சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலி, குகேஷ், விஜித் உள்ளிட்ட 8 வீரர்கள் இந்த கேண்டிட் செஸ் தொடரில் விளையாடி வருகின்றனர். சுற்றுகள் அடிப்படையில் வெற்றி பெறும் நபர், விரைவில் நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனா சீனாவின் டிங் லிரேனை எதிர்கொள்ளுவர்.
இதுவரை மூன்று சுற்றுகள் நடைபெற்று உள்ள நிலையில் பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி 1.5 புள்ளிகள் பெற்று உள்ளனர். முன்னதாக இரண்டாவது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, மற்றொரு இந்திய வீரர் குகேஷிடம் தோல்வியை தழுவினார். குகேஷ் இரண்டு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். மகளிர் பிரிவில் சீன வீராங்கனை Tan Zhongyi 2.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
தமிழக வீராங்கனை வைஷாலி 1.5 புள்ளிகளுடன் உள்ளார். 8 வீரர்கள் மோதும் ரவுண்ட் ராபில் சுற்றில் அடுத்தடுத்து வெற்றி பெற்றும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வீரர்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : DC Vs MI Toss : டாஸ் வென்று டெல்லி பந்துவீச்சு தேர்வு! முதல் வெற்றி பெறுமா மும்பை? - IPL 2024