ETV Bharat / sports

பிரம்மாண்டமாக தொடங்கியது பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா! - Paris Olympics 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 8:20 AM IST

Paris Olympics opening ceremony: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாண வேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

வண்ண விளக்குகளால் மிளிரும் ஈபிள் டவர்
வண்ண விளக்குகளால் மிளிரும் ஈபிள் டவர் (Credit -ANI)

பாரிஸ்: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்டு.

களைக்கட்டிய பாரிஸ்:இந்தநிலையில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நேற்று இரவு கோலாகலமாகத் தொடங்கியது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரையில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், தடகளம், டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் மாற்று வீரர்கள் உட்பட 117 தொடரில் பங்கேற்று உள்ளனர். வழக்கமாகப் பிரம்மாண்டமாக அரங்கம் அல்லது மைதானம் அமைத்துத் தொடங்கவிழா நடத்தப்படும்.

ஆனால் ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பாரிசிஸின் மையப்பகுதியில் ஓடும் சென் நதியில் தொடங்கியது. இதனை பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொடக்கி வைத்தார். ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல் ஏந்திச் சென்றனர்.

இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள் (Credit -ANI)

இதனையடுத்து 85 சொகுசு படகுகளில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும், தங்கள் நாட்டின் உடைய தேசியக் கொடியை ஏந்தியவாறு சென்றனர். முதல் அணியாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் பயணித்தது. கடைசி அணியாகப் போட்டியை நடத்தும் பிரான்ஸ் சென்றது.

சென் நதியில் தொடங்கிய இந்த பயணம் சுமார் 6 கி.மீ சென்று பான்ட் டி நதிக்கரையில் நிறைவடைந்தது. இதனை நதியின் இரு பக்கமும் நின்று லட்சக்கணக்கான ரசிகர்கள் இதனைப் பார்வையிட்டனர். பிரம்மாண்ட அணி வகுப்பு நிறைவடைந்ததும், உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் அருகே பாரம்பரிய நடனம், சிலிர்ப்பூட்டும் சாகசங்கள், வாண வேடிக்கைகள், வண்ணவிளக்குகள் என 4 மணி நேரம் நடைபெற்ற தொடக்கவிழாவின் காரணமாக பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டது.

தொடர்ந்து ஒலிம்பிக் தீபத்தைக் கொப்பரையில் ஏற்றியதும் விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஒலிம்பிக் குழு தலைவர் தாமஸ் பாச் மற்றும் பல்வேறு நாட்டுத் தலைவர்கள், பிரபலங்கள் என குவிந்து இருந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்றே நாடு திரும்புவோம்.. சரத் கமல் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.