பாரீஸ்: 33வது ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நேற்றுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. ஒலிம்பிக் தொடர் நடத்தப்படுகிறது என்றால் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறும், அதே சமயம் சில சர்ச்சையான விஷயங்களும் நடைபெறும். ஒலிம்பிக் தொடர் தொடக்க விழாக்கள் மைதானங்களில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் பாரீஸ் ஒலிம்பிக் தொடர் தொடக்கவிழா அந்நாட்டின் புகழ் பெற்ற சென் நதி கரையில் நடைபெற்றது.
1️⃣1️⃣7️⃣ of our 🇮🇳 athletes, competed across 1️⃣6️⃣ sporting disciplines and gave us memories of a lifetime at #ParisOlympics2024🥳❤️
— SAI Media (@Media_SAI) August 12, 2024
To our athletes, coaches, support staff, proponents of sport and especially the fans; THANK YOU 🫶🏻🙏🏼#TeamINDIA will be back #FasterHigherStronger💪🏻… pic.twitter.com/d276uPtHYw
அலங்கரிக்கப்பட்ட படகில் ஒவ்வொரு வீரர்களும் தங்கள் நாட்டின் உடைய தேசியக் கொடியை எந்தியாவாறு அணிவகுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியை சுமார் 3 லட்சம் ரசிகர்கள் நதி கரைகளில் நின்று பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு வீரர்களும் தங்களது நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடினார்.
Noah Lyles tied for having the slowest reaction time of anyone in the field, but he still won the men's 100m final...
— FloTrack (@FloTrack) August 4, 2024
REACTION TIMES:
Fred Kerley 🇺🇸 - 0.108
Marcell Jacobs 🇮🇹 - 0.114
Akani Simbine 🇿🇦 - 0.149
Kenny Bednarek 🇺🇸 - 0.163
Oblique Seville 🇯🇲 - 0.171
Kishane Thompson… pic.twitter.com/mqiufabp9l
சுவாரஸ்யமான நிகழ்வுகள்:
- ஆண்களுக்கான 100மீ ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்க பதக்கமும், ஜமைக்காவின் தாம்சன் வெள்ளிப்பதக்கமும் வென்றார். இவர்கள் இருவருக்கான வித்தியாசம் வெறும் 0.05 வினாடிகள் தான்.
- அதே போல் பெண்களுக்கான 100மீ ஓட்டத்தில், செயின்ட் லுாசியா என்ற குட்டி தீவைச் சேர்ந்த வீராங்கனை ஜூலியன் ஆல்பிரட் தங்கம் வென்றார். இது தான் ஒலிம்பிக் வரலாற்றில் அந்நாட்டின் முதல் தங்கமாகும்.
- மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் அமன் ஷெராவத். அவர் பதக்க கனவை நனவாக்க 10 மணி நேரத்தில் 4 கிலோ எடையை குறைத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
- அதே போல் துப்பாக்கிச் சுடுதல் வெள்ளிப் பதக்கம் வென்றார் துருக்கியை சேர்ந்த யூசுப் டிகேக். இவர் எந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல் கேஷுவலாக துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டார்.
Julien Alfred of Saint Lucia 🇱🇨 just derailed the USA and Jamaica’s hype train by winning the gold for the women’s 100 meters final! Sha’carri came second!
— MAJ (@maryam_Jidayi) August 3, 2024
💯 🤷♀️ #OlympicGames #Paris2024 pic.twitter.com/A3938mOzlJ - நீச்சல் போட்டியில் தங்க பதக்கம் வென்றார் நெதர்லாந்தை வீராங்கனை ஷரோன் வான் ட்ரோண்டல். இவர் இறந்து போன தன்னுடைய வளர்ப்பு நாய்க்குப் பதக்கத்தை அர்ப்பணித்தார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
- ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத். இதன் மூலம் 6 பதக்கங்கள் வென்ற இந்தியாவை(71) விட பதக்கப்பட்டியலில் பாகிஸ்தான்(62) முன்னிலையில் இருக்கிறது.
சர்ச்சைகள்: மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ பிரிவில் தங்கப் பதக்கப் போட்டிக்கு முன்னதாக 100 கிராம் அதிக எடையுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத். இது சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ளது.
அதே போல் பராகுவேவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை லுவானாவின் அழகு மற்ற வீரர்களின் கவனத்தைச் சிதறடிப்பதாகக் கூறி ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேறினர். ஆனால் அலான்சோவின் இருப்பு பராகுவே அணிக்குள் பொருத்தமற்ற சூழ்நிலையை உருவாக்குவதால் மட்டுமே அவர் வெளியேற்றப்பாட்டர் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற அல்ஜீரியா வீராங்கனை மீது எழுந்த பாலின சர்ச்சை, பதக்கம் தரமானதாக இல்லை என்று அமெரிக்க வீரர் நைஜா ஹூஸ்டனின் குற்றச்சாட்டு, இந்திய ஹாக்கி வீரர் அமித்துக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது, வீரர்கள் கொடுக்கப்பட்ட படுக்கையை அறை என பாரீஸ் ஒலிம்பிக்கில் சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இல்லை என்பதுபோல்தான் இருந்தது.
இதையும் படிங்க: நிறைவு பெற்றது ஒலிம்பிக் திருவிழா.. தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்திய ஸ்ரீஜேஷ், மனு பாக்கர்!