ETV Bharat / sports

பாரீஸ் ஒலிம்பிக்: 7வது நாளில் தமிழக வீரர், வீராங்கனைகள் சாதிப்பார்களா? - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவின் 7வது நாளான இன்று இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் போட்டிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்..

Etv Bharat
Paris Olympics 2024 Day 7 Schedule (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 1, 2024, 8:01 PM IST

பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா தொடங்கிய 6 நாட்களில் இந்தியா இதுவரை 3 பதக்கங்களை வென்று உள்ளது. அனைத்து வெண்கலப் பதக்கங்கள், கூடுதல் தகவலாக அனைத்து வெண்கலப் பதக்கங்களும் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டின் மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.

நேற்று (ஆக.1) நடைபெற்ற ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார். இந்நிலையில், 7வது நாளான இன்று (ஆக.2) இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

கோல்ப்: ஆண்கள் தனிநபர் ஸ்டோக் பிளே இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் சுபாங்கர் சர்மா மற்றும் ககன்ஜீத் புல்லர் ஆகியோர் 12.30 மணிக்கு விளையாடுகின்றனர். சர்வதேச தரவரிசையில் 173வது இடத்த்கில் உள்ள சுபாங்கர் சர்மா, பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நிச்சயம் பதக்கம் வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டில் மொத்தம் 17 கோல்ப் தொடர்களில் விளையாடி உள்ள சுபாங்கர் சர்மா அதில், 14 தொடர்களில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. அதேபோல் சர்வதேச தரவரிசையில் 295வது இடத்தில் உள்ள ககஞீத் புல்லரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு: மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனைகள் இசா சிங் மற்றும் மனு பாகெர் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். இவர்கள் ஆட்டம் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா இரண்டு வெண்கலம் வென்ற மனு பாகெர், தற்போது 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் களம் காணுகிறார். தொடர்ந்து நாட்டுக்காக மூன்றாவது பதக்கத்தை வென்று தரும் முனைப்பில் மனு பாகெர் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வில்வித்தை: கலப்பு குழு பிரிவில் எலிமினேஷன் சுற்றில் இந்தியா அணி பிற்பகல் 1:19 மணிக்கு விளையாடுகிறது.

படகு போட்டி: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் இறுதி போட்டியில் பால்ராஜ் பன்வார் பிற்பகல் 1:48 மணிக்கு விளையாடுகிறார்.

ஜூடோ: பெண்கள் +78 கிலோ எலிமினேஷன் சுற்றில் துலிகா மான் பிற்பகல் 1:30 மணிக்கு விளையாடுகிறார். துலிகா மான் முதல் முறையாக பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடுகிறார். கியூபாவை சேர்ந்த இடாலிஸ் ஓர்டிஸ் என்பவரை துலிகா மான் எதிர்கொள்கிறார். ஜூடோவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை துலிகா படைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாய்மர படகு போட்டி: பெண்களுக்கான டிங்கி பாய்மர படகு போட்டியில் தமிழக வீராங்கனை நேத்ரா குமரன் பிற்பகல் 3:45 மணிக்கு களம் காணுகிறார். அதேபோல் ஆண்களுக்கான டிங்கி பாய்மர படகு போட்டியில் மற்றொரு தமிழக விஷ்ணு சரவணன் மாலை 7:05 மணிக்கு விளையாடுகிறார். நேத்ரா மற்றும் விஷ்ணு இன்று பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கள் முதல் பந்தயத்தில் போட்டியிடுகின்றனர்.

தடகளம்: பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டம் முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் அங்கிதா மற்றும் பருல் சவுத்ரி ஆகியோர் இந்திய நேரப்படி இரவு 9:40 மணிக்கு விளையாடுகின்றனர்.

குண்டு எறிதல்: ஆண்களுக்கான ஷாட் புட் தகுதி சுற்றில் இந்திய வீரர் தாஜிந்தர்பால் சிங் டூர் இந்திய நேரப்படி இரவு 11:40 மணிக்கு விளையாடுகிறார். தஜிந்தர்பால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாக்கி: ஆடவர் பி பிரிவு லீக் போட்டியில் மாலை 4:45 மணிக்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-க்கு 1 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய போதிலும் இந்திய அணி காலிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசலேவுக்கு ரூ.1 கோடி பரிசு! மகாராஷ்டிர முதலமைச்சர் அறிவிப்பு! - paris olympic 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.